மேலும்

சிறிலங்கா ரூபா மதிப்பு வீழ்ச்சியை நியாயப்படுத்திய மத்திய வங்கி ஆளுனர்

அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி,  ஏனைய பல நாடுகளிலும் இதே நிலையே இருப்பதாக, அலட்சியமாக பதிலளித்துள்ளார்.

“இந்த ஆண்டில் அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 2.9 வீதத்தினால் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு எதிரான இந்திய ரூபாவின் மதிப்பும், 4.8 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாணயத்தின் மதிப்பு, 4.4 வீதத்தினாலும்,  அவுஸ்ரேலிய டொலரின் மதிப்பு 2.7 வீதத்தினாலும், இந்தோனேசிய நாணயத்தின் மதிப்பு 2.4 வீதத்தினாலும் சரிவு கண்டுள்ளன.

இவ்வாறு நாணய மதிப்பு குறைந்துள்ளதால், வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்தும் போது அதிகளவு நிதியை செலுத்த வேண்டியிருக்கும் என்று கூறுகிறார்கள்.

ஆனால், அப்படியல்ல. நாங்கள் அமெரிக்க டொலரில் தான் கடன்களைத் திருப்பிச் செலுத்துகிறோமே தவிர, சிறிலங்கா  ரூபாவில் அல்ல.” என்றும் தெரிவித்தார்.

இதுபற்றி கருத்து வெளியிட்ட சிறிலங்கா மத்திய வங்கியின் பிரதி ஆளுனர் கலாநிதி பி.நந்தலால் வீரசிங்க, பொருளாதாரம் மற்றும் கணிதம் தொடர்பாக சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள் தான் இப்படி தவறான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *