மேலும்

மட்டக்களப்பு மாநகர முதல்வரானார் சரவணபவன்

மட்டக்களப்பு மாநகர சபை முதல்வராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் தியாகராஜா சரவணபவன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாநகர சபை முதல்வரைத் தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று காலை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சலீம் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, மாநகர முதல்வர் பதவிக்கு தியாகராஜா சரவணபவனின் பெயரை முன்மொழிந்தது.  தமிழர் விடுதலைக் கூட்டணி, சார்பில் சிவலிங்கம் சோமசுந்தரம் முன்னிறுத்தப்பட்டார்.

இதையடுத்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 25 வாக்குகளைப் பெற்றுக் கொண்ட, தியாகராஜா சரவணபவன் மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்டார். இவருக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐதேக, ஈபிடிபி உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிவலிங்கம் சோமசுந்தரம் 11 வாக்குகளை மாத்திரம் பெற்றுக் கொண்டார். தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் இருவர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இதையடுத்து பிரதி முதல்வர் பதவிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கந்தசாமி சத்தியசீலனும், ஐதேக  சார்பில் சிவலிங்கமும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் சறீபன் ராஜாவும் முன்மொழியப்பட்டனர்.

இதையடுத்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 23 வாக்குகளைப் பெற்று கந்தசாமி சத்தியசீலன் பிரதி முதல்வர் பதவிக்கு தெரிவானார்.

மட்டக்களப்பு மாநகர முதல்வராகப் பதவியேற்றுள்ள சரணவபவனின் தந்தை தியாகராஜாவும், மட்டக்களப்பு மாநகர முதல்வராக முன்னர் பதவியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *