மேலும்

பருத்தித்துறை நகர சபை முதல்வர் பதவியும் கூட்டமைப்பு வசம்

point pedro UCதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதிக ஆசனங்களைக் கைப்பற்றிய பருத்தித்துறை நகர சபையைின் முதல்வர் பதவியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசப்படுத்தியுள்ளது.

இன்று காலை நடந்த முதல் அமர்வில், பருத்தித்துறை நகர சபையின் முதல்வர் தெரிவு இடம்பெற்றது.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நிறுத்தப்பட்ட ஜோசப் இருதயராஜா 7 வாக்குகளைப் பெற்று நகர முதல்வராக தெரிவு செய்யப்பட்டார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்ட க.பாலசுப்ரமணியம் 6 வாக்குகளை மாத்திரம் பெற்றார்.

பிரதி முதல்வர் பதவிக்கு, கூட்டமைப்பு சார்பில் நிறுத்தப்பட்ட மதினி நெல்சன் தெரிவு செய்யப்பட்டார்.

point pedro UC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *