மகிந்தவின் எழுச்சிக்குப் பின் வீழ்ச்சி காணும் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு
சிறிலங்காவில் உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணி வெற்றி பெற்றதையடுத்து, அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 1.18 ரூபாவினால் (0.76 வீதம்) வீழ்ச்சி கண்டுள்ளது.
சிறிலங்காவில் உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள அரசியல் உறுதிப்பாடின்மையினால், பொருளாதாரம் ஆட்டம் கண்டு வருகிறது.
கடந்த பெப்ரவரி 9ஆம் நாள் 156.19 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலர் ஒன்றின் மதிப்பு நேற்று, 157.37 ரூபாவாக வீழ்ச்சி கண்டது. இது முன்னொருபோதும் இல்லாதளவு வீழ்ச்சியாகும்.
கண்டியில் வன்முறைகள் வெடித்த பின்னர், அமெரிக்க டொலர் ஒன்றின் மதிப்பு 56 சதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளது.
இந்த ஆண்டில் மாத்திரம், அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 2.22 ரூபாவினால் குறைவடைந்துள்ளது. இது 1.43 வீத வீழ்ச்சியாகும்.