மேலும்

மைத்திரியுடன் இணைந்தார் சிறியாணி விஜேவிக்கிரம- வலுவிழக்கிறது கூட்டு எதிரணி

Sriyani Wijewickrema- maithriகூட்டு எதிரணியைச் சேர்ந்த அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறியானி விஜேவிக்கிரம, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிறியானி விஜேவிக்கிரம, ஐதேகவுடன் இணைந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைத்ததை அடுத்து. மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியுடன் இணைந்து செயற்பட்டு வந்தார்.

கூட்டு எதிரணியின் மீது அதிருப்தி அடைந்துள்ள அவர் நேற்று மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணி நாடாளுமன்றத்தில் 55 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.

கூட்டு எதிரணியின் உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை கடந்த மாதம் பறிக்கப்பட்டது.

Sriyani Wijewickrema- maithri

கடந்த வாரம், அனுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசநாயக்க சிறிலங்கா அதிபருக்கு ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார்.

நேற்று சிறியானி விஜேவிக்கிரமவும் ஆளும்கட்சிக்கு தாவியுள்ளார். இதனால் மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணியின் பலம் குறையத் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *