மேலும்

பொது பலசேனாவுடன் தொடர்பு இல்லை – குற்றச்சாட்டை மறுக்கிறார் கோத்தா

Gotabaya Rajapaksa, Sri Lanka's former defence secretary and brother of former President Mahinda Rajapaksa speaks to the members of the Foreign Correspondents Association of Sri Lanka in Colomboபொது பலசேனா அமைப்புடனோ அல்லது அண்மையில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்களை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்களுடனோ தமக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொது பலசேனாவுடன் என்னைத் தொடர்புபடுத்தியும், அண்மையில் முஸ்லிம் வணிக நிறுவனங்கள் எரிக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புபடுத்தியும் எனது பெயரைக் கெடுக்கும் வகையில், வெளியிடப்பட்டுள்ள செய்திகளைக் கண்டிக்கிறேன்.

இந்தக் குற்றச்சாட்டுகளை வன்மையாக நிராகரிக்கிறேன். எனது நற்பெயரைக் கெடுப்பதற்காக மீண்டுமொருமுறை மேற்கொள்ளப்படும் முயற்சி இதுவாகும்.

இந்த சூழ்ச்சிகளின் பின்னாலுள்ள அரசியல் நிகழ்ச்சி நிரலை புரிந்து கொள்ள வேண்டும். இனநல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய வெறுப்புணர்வு செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என்று கோத்தாபய ராஜபக்ச தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

ஒரு கருத்து “பொது பலசேனாவுடன் தொடர்பு இல்லை – குற்றச்சாட்டை மறுக்கிறார் கோத்தா”

  1. மகேந்திரன் says:

    இப்போது இல்லை என்றால் முன்பு????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *