ஓராண்டுக்குள் மோசமடைந்துள்ள உள்நாட்டுப் பொருளாதார நிலைமை
சிறிலங்காவின் உள்நாட்டுப் பொருளாதார நிலைமை, ஓராண்டுக்கு முந்தைய நிலைமையுடன் ஒப்பிடுகையில் மோசமடைந்துள்ளதாக அண்மைய கருத்துக்கணிப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
சிறிலங்காவின் உள்நாட்டுப் பொருளாதார நிலைமை, ஓராண்டுக்கு முந்தைய நிலைமையுடன் ஒப்பிடுகையில் மோசமடைந்துள்ளதாக அண்மைய கருத்துக்கணிப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
பொத்துவிலில் அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்களின் யூத வழிபாட்டு தலமான சபாத் இல்லத்தை (Shabad House) அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இரண்டு இலட்சம் பேரைக் கொண்ட சிறிலங்கா இராணுவத்தில், 2500 பேரைத் தவிர ஏனையோர் அனைவரும் சிங்கள பௌத்தர்களே என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் கொண்டு வருவதற்கு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று, கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், சிறிலங்கா அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சிறிலங்காவில் முகத்தை முகத்தை மூடி உடைகளை அணிவது இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது அனுமதியின்றி 40/1 தீர்மானத்தில் கையெழுத்திடப்பட்டது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறுவாரெனின், ஜெனிவா தீர்மானத்துக்கு அமைய உருவாக்கப்பட்ட காணாமல் போனோருக்கான பணியகத்தை மூடுவதற்கு அவர் உத்தரவிட வேண்டும் என்று சிறிலங்கா அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
கண்டியில் அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில், சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறிலங்காவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் கண்டித்துள்ளார்.
கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டி விட்டவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வழங்கப்பட்டதா என்பது குறித்து விசாரித்து வருவதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று இஸ்லாமிய நாடுகள் சிலவற்றின் தூதரகங்களின், இராஜதந்திரிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.