மேலும்

பிரித்தானிய தேர்தல் – முன்னிலைக்கு வந்தது கொன்சர்வேட்டிவ் கட்சி

Theresa May  (1)பிரித்தானியாவில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆரம்பத்தில் பின்தங்கியிருந்த தெரெசா மே தலைமையிலான ஆளும் கொன்சர்வேட்டிவ் கட்சி தற்போது முன்னணி பெற்றுள்ளது. 

650 உறுப்பினர்களைக் கொண்ட பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள 622 தொகுதிகளுக்கான முடிவுகளின் படி, ஆளும் கொன்சர்வேட்டிவ் கட்சி 299 ஆசனங்களுடன் முன்னணியில் இருக்கிறது.

ஆரம்பத்தில் முன்னிலை பெற்றிருந்த எதிர்க்கட்சியான தொழிற்கட்சி, 256 ஆசனங்களுடன் இரண்டாமிடத்தில் உள்ளது. ஸ்கொட்டிஸ் தேசியக் கட்சி 34 ஆசனங்களையும், லிபரல் ஜனநாயக கட்சி 12 ஆசனங்களையும் இதுவரையில் பெற்றுள்ளன.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெறுவதற்கு , 326 ஆசனங்கள் தேவை என்ற நிலையில், தற்போதுள்ள நிலையில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை பெறும் வாய்ப்பு இல்லை என்று கருதப்படுகிறது.

வெளியாகும் முடிவுகளின் அடிப்படையில் கொன்சர்வேட்டிவ் கட்சிக்கு 318 ஆசனங்களும், தொழிற்கட்சிக்கு 267 ஆசனங்களும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *