மேலும்

மூத்த சட்ட நிபுணரும் இடதுசாரி பிரமுகருமான லால் விஜேநாயக்க காலமானார்

மூத்த சட்டவாளரும், இடதுசாரி அரசியல் பிரமுகருமான லால் விஜேநாயக்க, நேற்றுமாலை காலமானார். இவர் ‘தேசிய மக்கள் சக்தி’யின் தேசிய செயற்பாட்டுக் குழு மற்றும் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.

இறுதிக்காலம் வரை அரசியலில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த லால் விஜேநாயக்க, 22-வது திருத்த சட்டத்தை கடுமையாக எதிர்த்ததுடன், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட முன்வரைவுகளுக்கு எதிராகவும் தீவிரமாகப் பரப்புரை செய்தார்.

சிறிலங்கா இடதுசாரி அரசியல் இயக்கத்தில் முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்த லால் விஜேநாயக்க, பல பத்தாண்டுகளாக ‘லங்கா சமசமாஜக் கட்சியின்’ அரசியல் குழு  உறுப்பினராகப் பணியாற்றினார்.

அதிலிருந்து விலகிய பின்னர், ‘ஐக்கிய இடதுசாரி முன்னணியை’ (United Left Front) உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றிய அவர், தொடர்ந்து இடதுசாரி அரசியலில் தன்னை ஈடுபடுத்தி வந்தார்.

மத்திய மாகாண சபையின் முதலாவது அவைத் தேர்தலில், எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *