மேலும்

பேராசிரியரைப் பதிலளிக்க விடாமல் செய்தியாளர்கள் மீது சீறிப் பாய்ந்த சுரேஸ் பிரேமச்சந்திரன்

suresh_premachandranதமிழ் மக்கள் பேரவையின் செய்தியாளர் மாநாட்டில், பேராசிரியர் சி.க.சிற்றம்பலத்திடம் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவரைப் பதிலளிக்க விடாமல், செய்தியாளர்கள் மீது சினத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

இன்று காலை யாழ்.பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தின் முடிவில், செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது, தமிழ் மக்கள் பேரவை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு அழைப்பு விடுக்கவில்லையா  என செய்தியாளர் ஒருவர் இணைத்தலைவர்களிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த இணைத்தலைவர்களில் ஒருவரான மருத்துவர் பி.லக்ஸ்மன் தமிழ் அரசு கட்சி சார்பாக அந்தக் கட்சியின் உப தலைவர் சி.க.சிற்றம்பலம் இது தொடர்பில் பதிலளிப்பார் என்று தெரிவித்தார்.

இதையடுத்து கருத்து தெரிவித்த பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் , தமிழ் அரசு கட்சியின் முன்னாள் தலைவர், கட்சியின் நீண்ட கால உறுப்பினர், எனவே நான் அந்தக் கட்சி சார்பில் வந்துள்ளேன் என தெரிவித்தார்.

அவ்வாறெனின், தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்க தமிழ் அரசு கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா  என்றும், கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் அனுமதியுடன் தான் இந்தப் பேரவையில் அங்கம் வகிக்கிறீர்களா  என்றும், பேராசிரியர் சி.க.சிற்றம்பலத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது, அவரைப் பதிலளிக்க விடாமல் குறுக்கிட்ட  ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர்,சுரேஸ் பிரேமசந்திரன், இவ்வாறான கேள்விகளை நீங்கள் கட்சியின் தலைமை என கூறுபவர்களையும், அக் கட்சியை சார்ந்தவர்களையும் தான் கேட்க வேண்டும். இவ்வாறான கேள்விகளை இங்கே கேட்காதீர்கள்.  அதனை போய் கட்சி அலுவலகத்தில் கேளுங்கள் என்று செய்தியாளர்கள் மீது சீறிப் பாய்ந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *