மேலும்

ஜெனிவாவில் தொடங்கியது சிறிலங்கா குறித்த தீர்மான வரைவு மீதான விவாதம் – நேரலைப் பதிவு

UNHRCஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு மீதான விவாதம் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பிலான தீர்மான வரைவு மீதான, விவாதத்தை தொடக்கி வைத்து அமெரிக்கத் தூதுவர் கெய்த் ஹாப்பர் உரையாற்றினார்.

இதையடுத்து இணை அனுசரணை நாடான மொன்ரெனிக்ரோ பிரதிநிதி உரையாற்றுகிறார். அடுத்து மற்றொரு இணை அனுசரணை நாடான மசிடோனியாவின் பிரதிநிதி உரையாற்ற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அடுத்து, இணை அனுசரணை நாடுகளில் ஒன்றான பிரித்தானியப் பிரதிநிதி உரையாற்றுகிறார்.

அடுத்து சீனப் பிரதிநிதி உரையாற்றுகிறார். வேறு நாடுகள் உரையாற்ற விண்ணப்பிக்காத நிலையில், சிறிலங்கா பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்கவுக்கு உரையாற்ற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அடுத்து, தீர்மான வரைவை வரவேற்று தென்னாபிரிக்கப் பிரதிநிதி உரையாற்றி வருகிறார். அடுத்து கானா  பிரதிநிதி உரையாற்றுகிறார்.

தீர்மான வரைவு குறித்து வாக்கெடுப்பு நடத்த எந்த நாடும் கோராத நிலையில் ஒருமனதாக நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்தியப் பிரதிநிதி உரையாற்றுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *