மேலும்

ராஜீவைத் தாக்கிய விஜித ரோகண முக்கியமான நபர் அல்லவாம்- பிஜேபி கூறுகிறது

vijithamuniராஜீவ்காந்தியைத் தாக்கிய முன்னாள் கடற்படைச் சிப்பாயான விஜேமுனி விஜித ரோகண டி சில்வா, ஒரு முக்கியமான நபர் அல்ல என்றும், அவர் கட்சியை விட்டு வெளியேறுவதால் தமக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும்  பொது ஜன பெரமுன (பிஜேபி) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பொது ஜன பெரமுனவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கருத்து வெளியிடுகையில்,

‘திடீரென எமது கட்சியின் செயலகத்துக்கு வந்த விஜேமுனி விஜித ரோகண டி சில்வா கம்பகா மாவட்ட பரப்புரைத் தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என்று கேட்டார்.

நாம் அதற்கு மறுப்புத் தெரிவித்தோம்.  அதன் பின்னர் அவர் காணாமற்போய் விட்டார். அதன் பின்னர் அவரை நாம் வேட்பாளராக நிறுத்துவதில்லை என்று முடிவெடுத்தோம்.

அவர் வெளியே போனதால் எமக்குப் பாதிப்பு இல்லை. இத்தகையவர்களால் பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியாது” என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியைத் தாக்கியவர் என்பதால், புற அழுத்தங்கள் காரணமாகவே அவருக்கு வேட்புமனு கொடுக்காமல் பிஜேபி தவிர்த்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

1987ஆம் ஆண்டு இந்திய – சிறிலங்கா அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட்ட இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்திக்கு  வழங்கப்பட்ட கடற்படை அணிவகுப்பு மரியாதையின் போது, அவர் மீது தனது லீஎன்பீல்ட் துப்பாக்கியின் பிடியால், விஜித ரோகண தாக்குதல் நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *