மேலும்

சிறிலங்காவுக்கு சாதகமாக செயற்படும் அமெரிக்கா?

Marie Harfசிறிலங்கா விவகாரத்தில் அமெரிக்கா சில சாதகமான நகர்வுகளை மேற்கொள்ளக் கூடும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் மேரி ஹாப் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

வொசிங்டனில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அடுத்தவாரம் அமெரிக்கா வரவுள்ளது குறித்து கேள்வி எழுப்ப்ப்பட்டது.

அதற்குப் பதிலளித்த இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர், அடுத்தவாரம் நடக்கவுள்ள இந்தச் சந்திப்புத் தொடர்பான அட்டவணைப்படுத்தப்பட்ட அறிவிப்புகள் ஏதும் கைவசம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

“எனினும், நீண்டகாலப் பிரச்சினையாக உள்ள நல்லிணக்கம், ஜனநாயக ஆட்சி, பொறுப்புக்கூறல், உள்ளிட்ட விவகாரங்களுக்குத் தீர்வுகாண சிறிலங்காவின் புதிய அரசாங்கம், எடுத்துள்ள நடவடிக்கைகளை நாம் வரவேற்றுள்ளோம்.

நிச்சயமாக, இங்கு சில சாதகமான நகர்வுகளை காணமுடிகிறது. அடுத்தவாரம் மேலதிகமான விபரங்களை எதிர்பார்க்க முடியும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *