மேலும்

இன்று காலை கொழும்பு வருகிறார் பாப்பரசர்

popeபாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் இன்று காலை சிறிலங்காவுக்குப்  பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அவரை வரவேற்பதற்கு சிறிலங்காவில் பெரும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிலிப்பைன்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு, பாப்பரசர்  பிரான்சிஸ் நேற்றிரவு தனி விமானம் மூலம் சிறிலங்காவுக்குப் புறப்பட்டுள்ளார்.

அவர் பயணம் செய்யும் விமானம், இன்று காலை 9 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அரசாங்கத் தரப்பினரும் கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர்களும் வரவேற்பர்.

pope-depature (1)

pope-depature (2)

அதையடுத்து கட்டுநாயக்கவில் இருந்து கொழும்புக்கு வீதியால் வாகனப் பேரணியாக அழைத்துச் செல்லப்படுவார்.

பிற்பகல் 1.15 மணியளவில் சிறிலங்காவில் உள்ள கத்தோலிக்க ஆயர்களைச் சந்திக்கும் பாப்பரசர், பிற்பகல் 5 மணியளவில், அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்துவார்.

மாலை 6.15 மணியளவில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் மதங்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்றிலும் பாப்பரசர் பங்கேற்கவுள்ளார்.

நாளை காலை காலிமுகத் திடலில், பிரார்த்தனை ஒன்றை நடத்தவுள்ள பாப்பரசர், மாலையில், மடுத் தேவாலயத்துக்கு பயணம் மேற்கொண்டு ஆராதனைகளில் பங்கேற்பார்.

நாளை மறுநாள் காலை 9 மணியளவில் அவர் வத்திக்கான் புறப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாப்பரசரை வரவேற்க சிறிலங்காவின் கொழும்பு நகரமும், மன்னாரின் மடுத் தேவாலயமும் விழாக்கோலம் பூண்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *