மேலும்

காங்கேசன் லங்கா சீமெந்து நிறுவனத்தை சுவீகரிக்கிறது சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு

kks-cementகாங்கேசன்துறையில் உள்ள லங்கா சீமெந்து நிறுவனத்தின் 104 ஏக்கர் காணியையும், தொழிற்சாலைக் கட்டடங்களையும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு சுவீகரிக்கவுள்ளது.

லங்கா சீமெந்து நிறுவனத்தின் தொழிற்சாலைக் கட்டடங்கள் மற்றும் அது அமைந்துள்ள 104 ஏக்கர் காணியை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு சுவிகரிக்கவுள்ளதாக, அந்த நிறுவனத்தின் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான எஸ்.எம்.சம்சுதீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர், கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையத்துக்கு அறிவித்துள்ளார்.

லங்கா சீமெந்து நிறுவனத்தை முழுமையாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு சுவீகரிக்கவுள்ளதால், அதனிடம் நட்டஈடு கோரப்பட்டுள்ளது.

எல்லா பணியாளர்களும் அரசாங்க உதவியுடன் விருப்பஓய்வு பெறும் திட்டத்துக்கமைய ஓய்வுபெற நிர்ப்பந்திக்கப்படவுள்ளனர்.

வடக்கில், இருந்த முக்கியமான இரண்டு தொழிற்சாலைகளில் ஒன்றான லங்கா சீமெந்து நிறுவனம், சிறிலங்காவில் சீமெந்து உற்பத்தி, இறக்குமதி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்தது.

1990ம் ஆண்டுக்குப் பின்னர், சிறிலங்காப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட இந்த நிறுவனம் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், இயங்காமல் இருந்து வருகிறது.

எனினும், இந்த தொழிற்சாலையை இயங்கவைக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக சிறிலங்கா அரசாங்கம் அவ்வப்போது வாக்குறுதி அளித்து வந்தாயினும், தற்போது அதனை முழுமைமாக படையினரின் தேவைக்காக சுவீகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *