கொழும்பில் ஐதேக தலைமையகம் மீது தாக்குதல் – பதற்றம்
கொழும்பில் ஐதேக தலைமையகமான சிறிகோத்தாவுக்கு வெளியே, ஆளும்கட்சி ஆதரவாளர்களின் குழுவொன்று ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டதையடுத்து, அங்கு வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.
கொழும்பில் ஐதேக தலைமையகமான சிறிகோத்தாவுக்கு வெளியே, ஆளும்கட்சி ஆதரவாளர்களின் குழுவொன்று ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டதையடுத்து, அங்கு வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.
அகில இலங்கை மக்கள் காங்கிரசை சேர்ந்த அமீர் அலி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கொட்டி வரும் பெருமழையால், பெரும் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில், ஆறுகள் பெருக்கெடுத்தும், குளங்கள் நிரம்பியும், பல பகுதிகள் வெள்ளக் காடாக மாறியுள்ளன.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அண்மைக்காலமாக, சக்தியை அளிக்கும் என்று கூறப்படும், ‘வஜ்ரா’ என்ற தங்க நிறமுள்ள மாந்திரீகப் பொருள் ஒன்றை தனது கைக்குள் வைத்திருப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
சிறிலங்காவின் அதிபர் தேர்தல் வரலாற்றில், பிரதான வேட்பாளரின் தேர்தல் வாக்குறுதிகளை அறிந்து கொள்ளாமலேயே, வாக்களிக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு உள்ளாகியுள்ளனர் சுமார் ஐந்தரை இலட்சம் வாக்காளர்கள்.
பதுளை மாவட்டத்தில் உள்ள ஹப்புத்தளையில், இன்று மாலை எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக ஐதேக நடத்திய தேர்தல் பரப்புரைக் கூட்டத்தின் மீது ஆளும்கட்சியினர் நடத்திய தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்தனர்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனது தேர்தல் பரப்புரைகளில் வடக்கு, கிழக்கில் ஒரு உத்தியையும், நாட்டின் பிறபகுதிகளில் இன்னொரு விதமான உத்தியையும் பயன்படுத்தி வருகிறார்.
எதிரணியின் பொதுவேட்பாளராகப் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அறிக்கை இன்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் வெளியிடப்பட்டுள்ளது.
சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க, வடக்கு, கிழக்கில் உள்ள சிறிலங்கா படையினர் மத்தியில், தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டுள்ளதாக, ஐதேக குற்றம்சாட்டியுள்ளது.
சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில் கிளர்ச்சி முறியடிப்பு நடவடிக்கைகளின் போது, உயர் பெறுமான இலக்குகளை (High Value Target) படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பான, அமெரிக்க புலனாய்வு அமைப்பின் இரகசிய அறிக்கை ஒன்றை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.