மேலும்

Archives

புலிகளின் முகாம்களுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியவருக்கே மரணதண்டனை

மிருசுவில் படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவித் தாக்கும் படையணியைச் சேர்ந்த சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க, மற்ற படையினர் பயந்து போயிருந்த போது தாம் விடுதலைப் புலிகளின் முகாம்களுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் அப்துல் கலாம்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் கலாநிதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம், இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

மிருசுவில் படுகொலை வழக்கில் சிறிலங்கா படை அதிகாரிக்கு மரணதண்டனை- நால்வர் விடுதலை

மிருசுவிலில் தமது வீடுகளைப் பார்வையிடச் சென்ற இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 8 தமிழர்களைப் படுகொலை செய்து புதைத்த குற்றச்சாட்டில், சிறிலங்கா இராணுவ சார்ஜன்ட் தர அதிகாரி ஒருவருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்துள்ளது.

சீனாவிடம் பாரிய போர்க்கப்பலை வாங்குகிறது சிறிலங்கா

சிறிலங்கா கடற்படைக்கு பாரிய போர்க்கப்பல் ஒன்றை சீனாவிடம் இருந்து வாங்குவது குறித்து, சீன பாதுகாப்பு அதிகாரிகளுடன் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

சீன- சிறிலங்கா கொமாண்டோக்களின் கூட்டுப் பயிற்சி ஆரம்பம்

சிறிலங்கா- சீன இராணுவங்களின் சிறப்புப்படைப் பிரிவுகள் மற்றும் கொமாண்டோப் படைப்பிரிவுகள் பங்கேற்கும் கூட்டுப் பயிற்சி இன்று சிறிலங்காவில் ஆரம்பமாகியுள்ளது.

சீன இராணுவ அதிகாரிகள் குழு சிறிலங்கா இராணுவத் தளபதியை சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சீன உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் குழு, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.

சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை இந்தியத் தூதுவர் சந்திப்பு

சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா இன்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். 

சிறிலங்காவில் சீனாவின் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் குழு

சிறிலங்கா இராணுவத்தின் தியத்தலாவ இராணுவப் பயிற்சி முகாமில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சீனாவின் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

புலிகளின் தாக்குதலில் மயிரிழையில் தப்பியவரே சிறிலங்கா விமானப்படையின் புதிய தளபதி

சிறிலங்கா விமானப்படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள, உலங்குவானூர்தி விமானியாக போர்க்களப் பகுதிகளில் பணியாற்றியவர் என்றும், விடுதலைப் புலிகளின் ஆர்.பி.ஜி தாக்குதலில் மயிரிழையில் உயிர்தப்பியவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா விமானப்படைத் தளபதியாக எயர் வைஸ் மார்ஷல் ககன் புலத்சிங்கள நியமனம்

சிறிலங்கா விமானப்படைத் தளபதியாக எயர் வைஸ் மார்ஷல் ககன் புலத்சிங்கள, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு இன்று காலை அறிவித்துள்ளது.