மேலும்

Archives

யோசித ராஜபக்சவுக்குப் பிணை – வெளிநாடு செல்லத் தடை

நிதி மோசடிக் குற்றச்சாட்டில் கடுவெல நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட யோசித ராஜபக்சவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.

உலோக வீடுகளை அமைக்கும் திட்டம் – மீள்பரிசீலனை செய்யுமாறு விக்னேஸ்வரன் கோரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கைச் சேர்ந்த வீடற்றவர்களுக்கு 65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தின் கீழ், உலோகங்களால் ஆன தயார்நிலைப் பொருத்து வீடுகளை அமைக்கும் திட்டத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மூத்த சமூக -அரசியற் செயற்பாட்டாளர் சிவராஜா : நோர்வே தமிழ்3 இனால் மதிப்பளிப்பு

மூத்த சமூக -அரசியற் செயற்பாட்டாளரான சிவராஜா கணபதிப்பிள்ளை, நோர்வே தமிழ்3 வானொலியினால் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம்

மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழ் அரசியல் கைதிகள் தமது போராட்டத்தை இன்று இடைநிறுத்த முடிவு செய்துள்ளனர்.

அமெரிக்காவின் 100 மில். டொலர் புத்தாயிரமாண்டு சவால் நிதியுதவி – சிறிலங்காவுடன் பேச்சு

சிறிலங்காவுக்கு புத்தாயிரமாண்டு சவால் நிதியத்தின் ஊடாக, 100 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவது தொடர்பாக, சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

யோசிதவுக்கு மார்ச் 24 வரை விளக்கமறியல் – பசிலுக்குப் பிணை

நிதிமோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட லெப்.யோசித ராஜபக்ச உள்ளிட்ட ஐந்து பேரையும், எதிர்வரும் மார்ச் 24ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க கடுவெல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசியலமைப்பு திருத்தம் குறித்து மக்கள் கருத்தறியும் குழு சம்பந்தனுடன் சந்திப்பு

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக மக்கள் கருத்தறியும் குழு நேற்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்  தசியக் கூட்டமைப்பின் தலைவருமான  இரா.சம்பந்தனை சந்தித்துக் கலந்துரையாடியது.

மூன்று பெண் சாதனையாளர்களுக்கு “நோர்வே தமிழ்3 இன் தமிழர் மூவர்” விருது

நோர்வே தமிழ் 3 வானொலியினால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் “தமிழ்3 இன் தமிழர் மூவர்” விருதுகள் இம்முறை மூன்று பெண் சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சிறிலங்காவுக்கு புத்தாயிரம் ஆண்டு சவால் உதவி – அமெரிக்க குழு மைத்திரியை சந்திப்பு

சிறிலங்காவுக்கு புத்தாயிரம் ஆண்டு சவால் (மிலேனியம் சவால்) திட்டத்தின் கீழ் மீண்டும் உதவியளிக்க அமெரிக்கா முன்வந்துள்ள நிலையில், இதுதொடர்பாக பேச்சுக்களை நடத்த உயர்மட்டக் குழுவொன்று கொழும்பு வந்துள்ளது.

சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் பாகிஸ்தான் அதிபர்

சிறிலங்காவுக்கு குறுகிய காலப் பயணம் ஒன்றை மேற்கொண்ட பாகிஸ்தான் அதிபர் மம்நூன் ஹுசெய்ன், நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.