நோர்வேயில் ’புதிய கடவுச்சீட்டு விதி முறை’ – வெளிநாட்டுப் பின்னணியுடையோர் பாதிப்பு
நோர்வேயில் ’புதிய கடவுச்சீட்டு விதி முறை’ காவல்துறை திணைக்களத்தினால் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இதில் வெளிநாட்டுப் பின்னணியைக் கொண்ட, அதேவேளை பல பத்து ஆண்டுகளாக ’நோர்வேஜியக் குடியுரிமை’ பெற்றிருந்தவர்களின் ‘பிறந்த இடம்’ கடவுச்சீட்டிலிருந்து நீக்கப்படுகின்றது.










