மேலும்

Tag Archives: 19வது திருத்தச்சட்டம்

நேற்று நடைமுறைக்கு வந்தது 19வது திருத்தச்சட்டம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் 28ம் நாள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட, 19வது திருத்தச்சட்டம் நேற்றுமுதல் நடைமுறைக்கு வந்திருப்பதாக, சிறிலங்கா நாடாளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தாவெல தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்சவுக்கும் ஆப்பு வைத்தது 19வது திருத்தச்சட்டம்

2021ம் ஆண்டு நடைபெறும் சிறிலங்காவின் அடுத்த அதிபர் தேர்தலில், ராஜபக்ச குடும்பத்தின் வாரிசான நாமல் ராஜபக்ச போட்டியிடும் வாய்ப்பை இழந்துள்ளார். 19வது திருத்தச்சட்டத்தின் மூலம், சிறிலங்கா அதிபர் தேர்தலில், போட்டியிடும் வேட்பாளரின் ஆகக்குறைந்த வயதெல்லை, 35 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கோத்தாவின் கனவுக்கு ஆப்புவைத்த 19வது திருத்தச்சட்டம் – தப்பினார் பசில்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 19வது திருத்தச்சட்டத்தின் மூலம், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் அரசியல் எதிர்காலம் சூனியமாக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் இன்று நடைமுறைக்கு வருகிறது 19வது திருத்தச்சட்டம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்ட 19வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் இன்று தொடக்கம், நடைமுறைக்கு வரவுள்ளதாக, சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.

மூன்றாவது வாசிப்பில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறியது 19வது திருத்தச்சட்டம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்றிரவு நடந்த குழுநிலை விவாதங்களுக்குப் பின்னர், 19வது திருத்தச்சட்டத்தின் மூன்றாவது வாசிப்பு, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

ஆதரவாளர்களுடன் மகிந்த முக்கிய சந்திப்பு – 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு

தன்னைப் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுமாறு வலியுறுத்தி வரும், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இன்று பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

19வது திருத்தத்தை எதிர்த்தால், தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடையாது- மைத்திரி கடும் போக்கு

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19வது திருத்தச்சட்டத்துக்கு எதிராக வாக்களிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு வழங்குவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

19வது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னரே நாடாளுமன்றத் தேர்தல்- சிறிலங்கா அதிபர்

19வது அரசியலமைப்புத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னரே, நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.