மேலும்

Tag Archives: வாக்களிப்பு

சிறிலங்கா அதிபர், பிரதமரின் அறிக்கைகளுக்கு தேர்தல் ஆணைக்குழு தடை

உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு முடியும் வரை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிமசிங்க ஆகியோர் வெளியிடும் எந்த அறிக்கைகளையும் வெளியிடக் கூடாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

இன்று உள்ளூராட்சித் தேர்தல் – சற்று நேரத்தில் தொடங்குகிறது வாக்களிப்பு

சிறிலங்காவில் 340 உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் – புதன் நள்ளிரவுடன் பரப்புரைகள் முடிவு

உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகள் நாளை மறுநாள் (பெப்ரவரி 07) நள்ளிரவுடன், முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இரவு 8 மணிக்குள் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கும்

எதிர்வரும் 10ஆம் நாள் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலின் முடிவுகள், அன்று இரவு 7 மணிக்கும், 8 மணிக்கும் இடையில் வெளிவரத் தொடங்கும் என்று சிறிலங்காவின் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொகமட் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நாளன்று முப்படைகளும் ரோந்து – தேர்தல் ஆணைக்குழு முடிவு

உள்ளூராட்சித் தேர்தல் நாளன்று பாதுகாப்புக்காக முப்படைகளினதும் உதவி பெற்றுக் கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அஞ்சல் மூல வாக்களிப்பு நேற்று ஆரம்பம்

உள்ளூராட்சித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நேற்று ஆரம்பமாகியுள்ளது என்றுமேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொகமட் தெரிவித்துள்ளார்.

அஞ்சல்மூல வாக்களிப்பு – நாளை ஆரம்பம்

உள்ளூராட்சித் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்களிப்பு நாளை ஆரம்பமாகவுள்ளது என்று தேர்தல் ஆணைய பணிப்பாளர் நாயகம் ஆர்.எல்.ஏ.எம். இரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அஞ்சல் மூல வாக்குச்சீட்டுகள் விநியோகம் நேற்று ஆரம்பம்

உள்ளூராட்சித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்குச்சீட்டுகள் விநியோகம் நேற்று ஆரம்பமாகியுள்ளது. காவல்துறையினரின் பாதுகாப்புடன், சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களிடம் வாக்குச்சீட்டுகள் ஒப்படைக்கப்பட்டன.

புர்கா, கறுப்புக் கண்ணாடி, முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு வாக்களிப்பு நிலையத்தில் தடை

முகத்தை மறைக்கும் ஆடைகள், மற்றும் பொருட்களை அணிந்து கொண்டு வாக்காளர்கள் எவரும் வாக்களிப்பு நிலையத்துக்குச் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பிக்கும் காலஎல்லை நீடிப்பு

உள்ளூராட்சித் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொகமட் அறிவித்துள்ளார்.