மேலும்

Tag Archives: ராஜீவ் காந்தி

ராஜீவ் காந்தி கொலையாளிகளை முற்றாக மன்னித்து விட்டோம் – ராகுல் காந்தி

ராஜீவ் காந்தி கொலையாளிகளைத் தானும், தனது சகோதரி பிரியங்காவும் முழுமையாக மன்னித்து விட்டதாக, ராஜீவ் காந்தியின் மகனும்,  காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உயிர் துறப்பதற்கு வேலூர் சிறையில் நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் முருகன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் முருகன், உயிர் துறப்பதற்காக இன்று நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

ராஜீவ் காந்தியின் சிறிலங்கா கொள்கை தோல்வி – மகாராஷ்டிர பாடநூலில் இருந்து நீக்கம்

மகாராஸ்டிர மாநில பாடநூல்களில் இடம்பெற்றிருந்த, சிறிலங்கா தொடர்பான கொள்கையில் ராஜீவ்காந்தியின் தோல்வி பற்றிய குறிப்புகளை அகற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கருணைக் கொலை செய்து விடுங்கள் – தமிழ்நாடு முதல்வருக்கு ரொபேர்ட் பயஸ் கடிதம்

தம்மைக் கருணைக் கொலை செய்து, உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்து விடுமாறு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவிக்கும், ரொபேர்ட் பயஸ், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவுக்காகவே புலிகளுடன் போரிட்டேன் – மகிந்த ராஜபக்ச

விடுதலைப் புலிகளுக்கு எதிராக தாம் இந்தியாவுக்காகவே போரை நடத்தியதாகவும் இந்தப் போருக்கு சாத்தியமான எல்லா வழிகளிலும் இந்தியா உதவியது என்றும் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பை ஏமாற்றமடையச் செய்த இந்தியா

வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பதற்கு, சிறிலங்காவுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்காது என்று, இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்திருப்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக, பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனவரி 26ஆம் நாள் கொல்லப்படுவாரா சிறிலங்கா அதிபர்? – விசாரணை ஆரம்பம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைக் கொலை செய்யும் சதித் திட்டம் ஒன்றுடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தில், முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மீது தாக்குதல் நடத்திய முன்னாள் கடற்படைச் சிப்பாய் விஜிதமுனி ரோகண தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ராஜீவ்காந்தி எடுத்த முடிவே அவரைப் பலியெடுத்தது – உத்தரப் பிரதேச மாநில ஆளுனர் ராம் நாயக்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, சிறிலங்காவுக்கு இந்திய அமைதிப்படையை அனுப்புவதற்கு அவர் எடுத்த முடிவினால் தான், உயிரை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில ஆளுனர் ராம் நாயக் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் கொலை கைதிகள் விடுதலைக்கு எதிரான வழக்கில் இந்திய மத்திய அரசின் வாதங்கள் பிசுபிசுப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்குத் தொடர்பாக இந்திய மத்திய அரசிடம் சரமாரியாக கேள்விகளை  எழுப்பியுள்ள இந்திய உச்சநீதிமன்றம், 7 பேரை ஏன் விடுவிக்கக் கூடாது என்பதற்கான மத்திய அரசின் வாதங்கள் தெளிவாக இல்லை என்றும் கூறியுள்ளது.

அடுத்தமாதம் 13ம் நாள் சிறிலங்கா வருகிறார் மோடி – அதிகாரபூர்வமாக அறிவிப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்தமாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்பதை சிறிலங்கா அரசாங்கம் அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துள்ளது.