மைத்திரி, ரணில், சந்திரிகா இன்று யாழ். பயணம் – ஒரு தொகுதி காணிகளை ஒப்படைப்பராம்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் இன்று யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் இன்று யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்துக்கு இன்று பயணம் மேற்கொண்டு, பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றதுடன், வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் 13ம் நாள் தொடக்கம், 14ம் நாள் வரை சிறிலங்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அடுத்த மாதம் மூன்று நாள் பயணமாக சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்துக்குச் செல்லவுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அடுத்த மாத நடுப்பகுதியில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, யாழ்ப்பாணம் செல்லவுள்ளதுடன் கண்டி அல்லது அனுராதபுரவுக்கும் செல்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு மாகாண ஆளுனர் பதவியைப் பொறுப்பேற்பதற்காக யாழ்ப்பாணம் சென்றுள்ள எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்காரவுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் முதலாவது சந்திப்பு நாளை இடம்பெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.
சிறிலங்காவுக்கு மூன்று நாள் பயணமாக இன்று கொழும்பு வரவுள்ள பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ சுவைர், யாழ்ப்பாணத்துக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் அகதிகளாக தமிழ்நாட்டைச் வந்தடைந்த ஐந்து இலங்கைத் தமிழர்களுக்குஉள்ளூர் நீதிமன்றத்தினால் தலா இரண்டு ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போர் முடிவுக்கு வந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்திருப்பது குறித்து நிபுணர்கள் கவலையடைந்துள்ளனர். சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் என்று அறியப்பட்ட இடம், இன்று குற்றவாளிகளும், சட்டத்தை மீறுவோரும் மகிழ்ச்சியாக வேட்டையாடும் இடமாக மாறியுள்ளது.
யாழ்ப்பாணச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்கள் 38 பேர் இன்று இரண்டாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.