கூட்டமைப்பின் யாழ், திருமலை, அம்பாறை மாவட்டங்களுக்கான ஆசனப்பங்கீடு குறித்து இறுதி முடிவு
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கான ஆசன ஒதுக்கீடு குறித்து ஏற்கனவே பெரும்பாலும், இணக்கப்பாடு எட்டப்பட்டு விட்டதாக கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.