அரியாலையில் துப்பாக்கிச் சூடு- இளைஞன் படுகாயம்
யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மட்டக்களப்பில் 32 சுற்றுலா விடுதிகள் அமைக்கப்படவுள்ளதாகவும் இதன் மூலம், 10 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்றும், சிறிலங்காவின் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
போரின் போதும் போருக்குப் பின்னரும், இராணுவத்துக்குள் உள்ள தனிப்பட்ட சிலரே குற்றங்களை இழைத்தனர் என்று முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச யாழ்ப்பாணத்தில் கூறியிருப்பது, தமிழ் மக்களின் இதயங்களை வெற்றி கொள்வதற்கான அரசியல் தந்திரம் என்று சிறிலங்கா அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
ஆசிய -பசுபிக் விவகாரங்களுக்கான பிரித்தானிய அமைச்சர் மார்க் பீல்ட் நாளை சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின் போது அவர் யாழ்ப்பாணத்துக்கும் செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநில அரசாங்கம் சிறிலங்காவில் கைத்தொழில் நடைக்கூடம் ( industrial corridor ) ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கொக்குவிலில் சிறிலங்கா காவல்துறையினர் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதலை நடத்தியவர்களுக்குத் தலைமை தாங்கியவர் என்று கூறப்படும் ஒருவர் உள்ளிட்ட ஆறு பேரை கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் கைது செய்திருப்பதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில், சிறப்பு அதிரடிப்படையினர் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இன்று இன்று காலை வரை நடத்திய பரவலான தேடுதல்களில் 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்தியாவுடன் ஆழமான பொருளாதார உறவுகள் சிறிலங்காவுக்கு மிகவும் முக்கியமானது. இது சிறிலங்காவுக்குப் பாதகமாக இருக்காது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் 40 வீதம் அறுவடை குறையும் என்று ஐ.நா உணவு விவசாய நிறுவனம் மற்றும் ஐ.நா உணவுத்திட்டம் என்பன எச்சரிக்கை விடுத்துள்ளதால், சிறிலங்காவில் பாரிய அரிசித் தட்டுப்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் பேரணி மற்றும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.