மேலும்

Tag Archives: யஸ்மின் சூகா

போர்க்குற்றவாளிகள் இனிமேலும் ஐ.நாவின் கௌரவமான பதவிகளை வகிக்க முடியாது – யஸ்மின் சூகா

போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள, சிறிலங்கா இராணுவ அதிகாரியான, லெப்.கேணல் கலன அமுனுபுரவை மாலியில் இருந்து திருப்பி அனுப்ப ஐ.நா எடுத்துள்ள முடிவுக்கு, அனைத்துலக மனித உரிமை செயற்பாட்டாளரான, யஸ்மின் சூகா வரவேற்புத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா படைகள் தொடர்ந்தும் விலக்களிப்புடன் செயற்படுகின்றன – யஸ்மின் சூகா

சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளாகி விட்ட போதிலும், சிறிலங்கா படையினர் விலக்களிப்புடன் தொடர்ந்து செயற்படுவதாக, அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தில் உள்ள ஆறு பாலியல் குற்றவாளிகளின் விபரங்கள் ஐ.நாவிடம் கையளிப்பு

பாலியல் வல்லுறவு மற்றும் சித்திரவதை குற்றவாளிகளான ஆறு சிறிலங்கா படை அதிகாரிகள் பற்றிய தகவல்களை, பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றும் ஐ.நா குழுவிடம், அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம், சமர்ப்பித்துள்ளது.

ஐ.நாவில் சிறிலங்காவின் படுதோல்வி

ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான ஆணைக்குழுவின் 59வது கூட்டத்தொடர் நவம்பர் 07 தொடக்கம் டிசம்பர் 07 வரை சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் இடம்பெறுகிறது. அண்மையில் இந்த ஆணைக்குழு சிறிலங்காவில் நிலவும் சித்திரவதைகள் தொடர்பாக ஆராய்ந்ததுடன் இன்னமும் அங்கு நிலைமை சீரடையவில்லை எனவும் அறிவித்தது.

சிறிலங்கா படையினரின் மரபணுவில் சித்திரவதைகள், கடத்தல்கள் ஊறியுள்ளது – யஸ்மின் சூகா

சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா ஆணைக்குழு , சிறிலங்காவின் நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட வேண்டும் என்றும், சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்படும் கடத்தல்கள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் குறித்து சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்,  அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் தலைவராகன யஸ்மின் சூகா கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறிலங்காவின் சித்திரவதைகள், பாலியல் வன்முறைகளை மீண்டும் அம்பலப்படுத்துகிறார் யஸ்மின் சூகா

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த, மனித உரிமைகள் நிபுணர் யஸ்மின் சூகாவின் தலைமையிலான சிறிலங்காவில் உண்மை மற்றும் நீதிக்கான அனைத்துலக திட்டம் என்ற அமைப்பு, சிறிலங்காவில் இடம்பெற்ற சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் குறித்த அறிக்கை ஒன்றை இந்த வாரம் வெளியிடவுள்ளது.

படையினரிடம் சரணடைந்து காணாமற்போன 110 புலிகளின் விபரங்களை வெளியிட்டார் யஸ்மின் சூகா

போரின் முடிவில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்து  காணாமற்போன அல்லது கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள், தளபதிகள் 110 பேரின் விபரங்களை, ஐ.நாவின் முன்னாள் நிபுணர் யஸ்மின் சூகா வெளியிட்டுள்ளார்.