மேலும்

Tag Archives: மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா

மேஜர் ஜெனரல் ஜெகத் டயசின் பதவியைப் பிடிக்க சிறிலங்கா இராணுவத்துக்குள் பனிப்போர்

சிறிலங்கா இராணுவத்தின் இரண்டாவது நிலைப் பதவியான, இராணுவத் தலைமை அதிகாரி பதவியைப் பிடிப்பதில், மூத்த இராணுவ அதிகாரிகளுக்குள் பனிப்போர் மூண்டுள்ளது.

மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா குறித்து விசாரணை நடக்கிறது- சிறிலங்கா இராணுவப் பேச்சாளர்

வெள்ளை வானில் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் கைத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டது தொடர்பாக, புலனாய்வு பிரிவு விசாரணைகளை நடத்தி வருவதாகவும், அது முடிந்த பின்னர், தமது விசாரணை அறிக்கையை வெளியிடுவோம் என்றும் சிறிலங்கா இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.

கொமாண்டோ படைப்பிரிவு தளபதி பதவியில் இருந்து நீக்கப்பட்டார் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா

மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா,சிறிலங்கா இராணுவ கொமாண்டோ படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பதவியில் இருந்து, நீக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

வெள்ளை வான் விவகாரம் – மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவிடம் 4 மணிநேரம் விசாரணை

மீரிஹான பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால் பயன்படுத்தப்படும் வெள்ளை வான் கைப்பற்றப்பட்டது தொடர்பாக, மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவிடம் நான்கு மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

தீவிர அரசியல் பரப்புரையாக மாறியுள்ள வெள்ளை வானும் பிரசன்ன சில்வாவின் கைத்துப்பாக்கியும்

போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட வெள்ளை வானுடன் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கி, மற்றும் அவரது மெய்க்காவலர்கள் மீரிஹானவில் பிடிபட்ட விவகாரம் சிறிலங்கா அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளை வான் சர்ச்சையில் வெளிவரும் புதிய தகவல்கள்

மிரிஹான பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு  கைப்பற்றப்பட்ட வெள்ளை வான் சிறிலங்கா இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்து வந்தது என்றும், அதிலிருந்து கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கி மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்குச் சொந்தமானது என்றும் விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.