முல்லைத்தீவில் சிறிலங்கா இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவுக்கான சுழியோடும் பயிற்சி பாடசாலை
முல்லைத்தீவு- நாயாறில், சிறப்புப் படைப்பிரிவுக்கான சுழியோடும் பயிற்சி பாடசாலை ஒன்றை சிறிலங்கா இராணுவம் புதிதாக அமைத்துள்ளது.
முல்லைத்தீவு- நாயாறில், சிறப்புப் படைப்பிரிவுக்கான சுழியோடும் பயிற்சி பாடசாலை ஒன்றை சிறிலங்கா இராணுவம் புதிதாக அமைத்துள்ளது.
முல்லைத்தீவு- கேப்பாப்பிலவில், சிறிலங்கா படையினர் வசம் இருந்த 189 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்படவுள்ளதாக சிறிலங்காவின் புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு- கொக்குத்தொடுவாயில் இருந்து 8 கடல் மைல் தொலைவில் உள்ள ஆழ்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த யானை ஒன்றை சிறிலங்கா கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.
முல்லைத்தீவு- வட்டுவாகல் பகுதியில் மில்லியன் கணக்கான மீன்கள் இறந்து கரையொதுங்கியுள்ளன. இதனால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது.
முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட எட்டாவது ஆண்டு நினைவு நாளான இன்று, முள்ளிவாய்க்கால் கிழக்கு தேவாலயம் அருகே, நினைவு நிகழ்வுகளை நடத்துவதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
முல்லைத்தீவில் சிறிலங்கா இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற பேருந்து மீது நேற்றுமுன்தினம் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு நீதி வழங்கக் கோரி, வடக்கு கிழக்கு பகுதிகளில் இன்று நடத்தப்படும் முழு அடைப்புப் போராட்டத்தினால், தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் முற்றாகச் செயலிழந்துள்ளன.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள விவசாயப் பண்ணைக் காணிகளை சிறிலங்கா படைகளின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவித்து, வடக்கு மாகாணசபையிடம் கையளிப்பதற்கு, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு புதிய நிபந்தனை ஒன்றை விதித்துள்ளது.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிட்ட போது, சிறிலங்கா படையினர் வசம் இருக்கும் தனியார் காணிகளை விடுவிப்பதாக மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எழுத்து மூலம் உறுதி வழங்கியிருந்தார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
சிறிலங்காவில் தங்கியிருந்த போது, ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களில் இந்திய அமைதிப்படையினர் குற்றவாளிகளாக கண்டறியப்பட்டால், அதுகுறித்து இந்திய அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.