சிறிலங்காவில் 18 அமைச்சர்கள் பதவியேற்பு – விஜேதாச உள்ளே, ரவி வெளியே
சிறிலங்காவில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை மறுசீரமைப்பின் போது, 18 அமைச்சர்கள் புதிய அல்லது மேலதிக அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டனர்.
சிறிலங்காவில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை மறுசீரமைப்பின் போது, 18 அமைச்சர்கள் புதிய அல்லது மேலதிக அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டனர்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்தப் பிரேரணையை தோற்கடிப்பதென ஏற்கனவே 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீ்ர்மானித்திருப்பதாக, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில், அதனை எதிர்த்து வாக்களிக்க, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐதேகவின் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் முடிவு செய்துள்ளன.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மீது நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணை ஒன்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் 80இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மனோ கணேசன் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, 10 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழுக் கூட்டத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும், அமைச்சர் மனோ கணேசனுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர் பில் ஜோன்சன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டுமா -இல்லையா என்பதை, நீதிமன்றமே முடிவு செய்யட்டும் என்று அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற வழிகாட்டல் குழு முடிவு செய்துள்ளது.
குற்றச்சாட்டுகளின்றி எவரும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கவில்லை என்று சிறிலங்காவின் சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோகண புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்வது என்று, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடந்த உயர்மட்டக் கூட் டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.