நீர்க்காகம் – IX கூட்டுப் பயிற்சிக்கு தயாராகும் சிறிலங்கா படைகள்
சிறிலங்கா இராணுவத்தின் ஏற்பாட்டில் ‘நீர்க்காகம் – IX ‘ கூட்டுப் பயிற்சி (Cormorant Strike IX) எதிர்வரும் செப்ரெம்பர் 6ஆம் நாள் தொடங்கவுள்ளது.
சிறிலங்கா இராணுவத்தின் ஏற்பாட்டில் ‘நீர்க்காகம் – IX ‘ கூட்டுப் பயிற்சி (Cormorant Strike IX) எதிர்வரும் செப்ரெம்பர் 6ஆம் நாள் தொடங்கவுள்ளது.
சிறிலங்கா உள்ளிட்ட பல நாடுகளின் நாணயத் தாள்களை சீனாவே அச்சிடுவதாக சவுத் சைனா மோர்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரேசிலில் சிறிலங்கா தூதுவராகப் பணியாற்றிய ஜெனரல் ஜெகத் ஜயசூரிய, போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து கொழும்பு திரும்பிய சூழல் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்களை முன்னிறுத்தி, த ஐலன்ட் நாளிதழில், சிறிலங்காவின் முன்னாள் தூதுவராக பணியாற்றிய பந்து டி சில்வா எழுதியுள்ள குறிப்பு-
தன் மீதும், தனது சகோதரரான கோத்தாபய ராஜபக்ச மீதும் கூட இலத்தீன் அமெரிக்க நாடுகளில் போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேசிலில் தொடரப்பட்டுள்ள போர்க்குற்ற வழக்கு தொடர்பான விவகாரத்தை உன்னிப்பாக கவனிக்குமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தாம் உத்தரவிடப் போவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேசிலில் போர்க்குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக, இன்னமும் அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் கிடைக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரேசில், கொலம்பியா ஆகிய நாடுகளில் போர்க்குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ள சிறிலங்கா தூதுவர் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய, பிரேசிலை விட்டு வெளியேறி விட்டதாக, ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.