மேலும்

Tag Archives: சிறிலங்கா

இந்திய நிறுவனத்திடம் மின்னணு அடையாள அட்டை திட்டம்- வீரவன்ச கவலை

மின்னணு தேசிய அடையாள அட்டையை (e-NIC)  உருவாக்கும் ஒப்பந்தம் இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது, தேசிய தரவு பாதுகாப்பு குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளதாக, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

வடக்கில் ஒரு தாதி கூட இல்லாத 33 மருத்துவமனைகள் – அமைச்சர் அதிர்ச்சியாம்

வடக்கு மாகாணத்தில் ஒரு தாதி கூட இல்லாத  33 ஆரம்ப மருத்துவமனைகள் இருப்பதாக சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

சர்ச்சையை கிளப்பும் பாகிஸ்தான் இராணுவத் தளபதியின் சிறிலங்கா பயணம்

பாகிஸ்தான் இராணுவத் தலைமைத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணம், சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

அமெரிக்க வரி – ஆடைத் தயாரிப்புத் துறையினர் கவலை

சிறிலங்கா பொருட்களுக்கு அமெரிக்கா 30 வீத வரியை அறிவித்திருப்பது குறித்து சிறிலங்காவின் ஆடைத் தொழிற்துறையினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்திய உடன்பாடுகளை வெளிப்படுத்த புதிய தடை

இந்தியாவுடனான உடன்பாடுகள் தொடர்பான விவகாரம், நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், அந்த  உடன்பாடுகளை தற்போது,  வெளியிட முடியாது என்று சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மதுவரித் திணைக்கள ஆணையாளராக முன்னாள் கடற்படை அதிகாரி

மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளராக முன்னாள் கடற்படை அதிகாரி றியர் அட்மிரல் பிரேமரத்ன நியமிக்கப்படுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

அடுத்த சில நாட்களில் பதில் கிடைக்கும் – காத்திருக்கும் சிறிலங்கா

அமெரிக்காவின்  வரிவிதிப்பு குறித்து ‘அடுத்த சில நாட்களில்’ முறையான தகவல் கிடைக்கும் என்று  எதிர்பார்த்திருப்பதாக சிறிலங்காவின் திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.

பாதிக்கும் கீழாக குறைந்த தொழிலாளர் பங்களிப்பு வீதம்

சிறிலங்காவில் உழைக்கும் வயதுள்ள மக்களில், பாதிக்கும் குறைவானவர்களே  வேலை செய்கிறார்கள் அல்லது தீவிரமாக வேலை தேடுகிறார்கள் என்று சிறிலங்கா மத்திய வங்கியின் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.

பொய் தகவல்களை பெற்ற 66 வீதமான சிங்கள செய்தி நுகர்வோர்

சிறிலங்காவில் 66 சதவீதமான சிங்கள செய்தி நுகர்வோர்,  அண்மையில் பொய்யான அல்லது தவறாக வழிநடத்தும் தகவல்களை எதிர்கொண்டதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

கருணா, பிள்ளையானின் நெருங்கிய சகா இனியபாரதி கைது

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான இனியபாரதி எனப்படும் கே.புஸ்பகுமார் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.