மேலும்

Tag Archives: சிறிலங்கா

சிறிலங்காவின் புதிய அரசுக்கு கடன் வழங்க அனைத்துலக நாணய நிதியம் மறுப்பு

சீனாவிடம் இருந்து முன்னைய அரசாங்கத்தினால் பெறப்பட்ட கடன்களில் ஒரு பகுதியை அடைப்பதற்கு, சிறிலங்காவின் புதிய அரசாங்கம்  விடுத்திருந்த கடன் கோரிக்கையை அனைத்துலக நாணய நிதியம் நிராகரித்து விட்டது.

சிறிலங்காவுக்கு வழங்கிய கடன்கள் விடயத்தில் சீனா கடும்போக்கு

சிறிலங்காவின் வேண்டுகோளின் பேரில், இரண்டு நாடுகளும் ஏற்றுக் கொண்டதற்கமையவே, சிறிலங்காவுக்கு கடன்களை சீனா வழங்கியுள்ளதாக, சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சோதிடத்தை இப்போது நம்புவதில்லையாம்- மகிந்த கூறுகிறார்

தாம் இப்போது சோதிடத்தை நம்புவதில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் டோன் நாளிதழின் செய்தியாளருடன் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சீன மீன்பிடிக் கப்பல்களுக்கான அனுமதியை மீளப்பெற்றது சிறிலங்கா

சிறிலங்கா கொடியுடன், அனைத்துலக கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்கு எட்டு சீன நிறுவனங்களின் கப்பல்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை சிறிலங்கா அரசாங்கம் ரத்துச் செய்துள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை சிறிலங்கா வருகிறார் சுஸ்மா

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், வரும் 6ம் நாள்- வெள்ளிக்கிழமை சிறிலங்காவுக்கு, இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்திய வரவு செலவுத் திட்டத்தில் சிறிலங்காவுக்கு 500 கோடி ரூபா ஒதுக்கீடு

இந்தியாவின் 2015/16ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், சிறிலங்காவுக்கான உதவித் திட்டங்களுக்கு 500 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

11 ஆண்டுகளுக்குப் பின்னர் கணிசமாக குறைந்தது சிறிலங்காவின் பணவீக்கம்

சிறிலங்காவின் பெப்ரவரி மாத பணவீக்கம், 11 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளதாக சிறிலங்காவின் அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன.

சீனாவுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தும் சிறிலங்கா – சீனப் பிரதமர் நம்பிக்கை

சிறிலங்காவில் சீனாவின் முதலீட்டுக்கு உகந்த சூழலை சிறிலங்கா ஏற்படுத்தும் என்று நம்புவதாக சீனப் பிரதமர் லி கெகியாங் தெரிவித்துள்ளார்.

சீனாவுடன் கலந்தாலோசிக்காமல் முடிவெடுக்கமாட்டோம் – பீஜிங்கில் மங்கள சமரவீர

சீனாவுடன் கலந்தாலோசனை நடத்தாமல், சீனாவின் திட்டங்கள் குறித்து சிறிலங்கா எந்த முடிவையும் எடுக்காது என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சபதத்துடன் சிறிலங்கா வந்துள்ள புதிய சீனத் தூதுவர்

சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் மூலோபாய ஒத்துழைப்பு கூட்டுறவை இறுதிப்படுத்தும் முயற்சிகளைத் தொடரப் போவதாக சிறிலங்காவுக்கான புதிய சீனத் தூதுவர் யி ஜியான்லியாங் தெரிவித்துள்ளார்.