மேலும்

Tag Archives: சிறிலங்கா

அமெரிக்க பரப்புரை நிறுவனங்களை நட்டாற்றில் கைவிட்ட மகிந்த ஆட்சி

அமெரிக்காவில் சிறிலங்காவின் நன்மதிப்பை உயர்த்துவதற்கு பரப்புரை நிறுவனங்களுடன் முன்னைய அரசாங்கத்தினால் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடுகள் புதிய அரசாங்கத்தினால் முறித்துக் கொள்ளப்பட்டுள்ளன.

அனைத்துலகத்தைப் பகைத்துக் கொள்ள முடியாது என்பதால் தான் உள்ளக விசாரணை – மங்கள சமரவீர

அனைத்துலக சமூகத்தைப் பகைத்துக் கொண்டு நாம் செயற்பட முடியாது என்பதால், அவர்களின் இணக்கப்பாட்டுடன், உள்ளகப் பொறிமுறையின் ஊடாக போர்க்குற்ற வவிசாரணைகளை முன்னெடுப்போம் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா – இந்திய உறவு நெருக்கம் சீனாவுக்கு மகிழ்ச்சியாம்

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கம் சீனாவுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக, சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் தரை – கடற்தோற்றத்தை மீளவடிவமைக்கும் சீனாவின் மூலோபாய நகர்வு

இந்திய மாக்கடலின் கரையோரம் முழுவதிலும் பாதுகாப்பான வலைப்பின்னலை உருவாக்கும் நோக்குடன் சீனாவால் மேற்கொள்ளப்படும் துறைமுக அபிவிருத்தித் திட்டத்திற்கு சிறிலங்காவின் தற்போதைய புதிய அரசாங்கமானது தனது ஒப்புதலை வழங்கியதானது அதிர்ச்சியளிக்கும் விடயமாகும்.

ஜோன் கெரியை சந்தித்தார் மங்கள

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று வொசிங்டனில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்காவின் சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் அமெரிக்க போர்க்குற்ற நிபுணர்

அனைத்துலக சமூகத்தினால் மதிக்கப்படும் நிலைமைக்கு சிறிலங்கா மீண்டும் வந்துள்ளதாக அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலர்  அன்ரனி ஜே பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியை கவலை கொள்ள வைத்துள்ள சிறிலங்காவின் குழப்பமான சமிக்ஞைகள்

சிறிலங்காவின் தற்போதைய சிறிசேன அரசாங்கம் தேர்தல் பரப்புரையின் போது சீனாவின் திட்டங்களை எதிர்ப்பேன் என வாக்குறுதி வழங்கிய போதிலும் அதனைத் தற்போது மீறிவருகிறது.

சிறிலங்காவுக்கு சாதகமாக செயற்படும் அமெரிக்கா?

சிறிலங்கா விவகாரத்தில் அமெரிக்கா சில சாதகமான நகர்வுகளை மேற்கொள்ளக் கூடும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் மேரி ஹாப் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் உள்விவகாரங்களில் தலையிடாதாம் சீனா

சிறிலங்காவின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யவோ, இன்னொரு நாட்டுக்கு எதிராக சிறிலங்காவைப் பயன்படுத்தவோமாட்டது என்று சீனா உறுதியளித்துள்ளது.

சிறிலங்காவை எதற்காக அரவணைக்க வேண்டும்? – ஒரு அமெரிக்கப் பார்வை

அமெரிக்க-சிறிலங்கா உறவுகளை மீளவும் நிறுவுவதற்கான திட்டங்கள் எதனையும் அமெரிக்கா முன்னெடுக்காது விட்டால், 21 மில்லியன் மக்களைக் கொண்ட கேந்திர முக்கியத்துவம் மிக்க இலங்கைத் தீவுடன் நெருக்கமான உறவைப் பேணுவதற்கான வாய்ப்பை இழக்கும் ஆபத்தை எதிர்நோக்க வேண்டியேற்படும்.