மேலும்

Tag Archives: சந்திரிகா குமாரதுங்க

சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க காலமானார்

சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க உடல்நலக் குறைவினால் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று மதியம் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 83 ஆகும்.

சம்பந்தன், சந்திரிகாவையும் இன்று சந்திக்கிறார் நோர்வே வெளிவிவகார அமைச்சர்

சிறிலங்காவுக்கு இன்று ஒரு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவிருக்கும், நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரென்டே, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க அவசரப்படமாட்டோம் – என்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும், சிறப்பு நீதிமன்றத்தை  அமைக்கும் விவகாரத்தில், தமது அரசாங்கம் அவசரமாகச் செயற்படாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பலாலியில் அனைத்துலக விமான நிலையம் – மாவையிடம் திட்ட முன்மொழிவு

பலாலி விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக விரிவாக்கும் திட்டம் தொடர்பான முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

ஜே.ஆர்.தொடக்கம் மகிந்த வரை – அச்சிடத் தயார் நிலையில் மகாவம்ச நூலின் புதிய பதிப்பு

மகாவம்ச நூலின் மேலதிக இணைப்பாக, ஜே.ஆர். ஜெயவர்த்தன காலம் தொடக்கம் மகிந்த ராஜபக்சவின் காலம் வரையான புதிய பகுதிகள் அச்சிடப்படவுள்ளன.

கடந்தகாலத் தவறுகளை ஏற்றுக்கொண்டாலே நல்லிணக்கம் சாத்தியம் – சந்திரிகா

கடந்தகாலத் தவறுகள் மற்றும் சிறுபான்மையினருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஏற்றுக் கொள்ளாமல், நல்லிணக்கம் சாத்தியப்படாது என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகள் விவகாரம் – மைத்திரி, ரணில், சந்திரிகாவைச் சந்திக்கப் போகிறதாம் கூட்டமைப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஆகியோருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தவாரம் பேச்சு நடத்தவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர்  மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

சந்திரிகா படுகொலை முயற்சி வழக்கில் இருவருக்கு 300 ஆண்டுகள் சிறைத்தண்டனை

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தி படுகொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில், இரண்டு பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம், 300 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.

புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்தார் சந்திரிகா

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் இன்று சந்தித்தார். புதுடெல்லியில் இன்று ஆரம்பமான அனைத்துலக இந்து- பௌத்த மாநாட்டின் போதே,  இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

புதுடெல்லியில் மோடியைச் சந்திக்கிறார் சந்திரிகா

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை தேர்தல்களில் தோற்கடிப்பதில் முக்கிய பங்காற்றியவரான முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.