மேலும்

Tag Archives: கலாநிதி சரத் அமுனுகம

ஐ.நா தலையீட்டை எதிர்க்க சுரேன் ராகவனை ஜெனிவாவுக்கு அனுப்புகிறார் சிறிலங்கா அதிபர்

வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் உள்ளிட்ட மூன்று பேர் சிறிலங்கா அரசாங்கத்தின் தரப்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

ஐதேகவுடன் பேச சரத் அமுனுகம தலைமையில் குழுவை நியமித்தது சுதந்திரக் கட்சி

ஐதேகவுடன் இணைந்து தொடர்ந்தும் கூட்டு அரசாங்கத்தை முன்னெடுப்பது பற்றிய பேச்சுக்களை நடத்துவதற்கு,  சிறிலங்கா சுதந்திரக் கட்சி தமது பிரதிநிதியாக கலாநிதி சரத் அமுனுகம தலைமையிலான குழுவை நியமித்துள்ளது.

புதிய அமைச்சரவை இழுபறியில் – 4 பதில் அமைச்சர்கள் மாத்திரம் நியமனம்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆறு அமைச்சர்கள் பதவிகளில் இருந்து விலகியதை அடுத்து, அவர்கள் வகித்து வந்த அமைச்சுப் பொறுப்புகளை, அமைச்சரவையில் உள்ள நான்கு அமைச்சர்களிடம் பகிர்ந்து கொடுத்துள்ளார் சிறிலங்கா அதிபர்.

சாகல ரத்நாயக்கவுக்கு வெளிவிவகார அமைச்சர் பதவி?

சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பதவிக்கு, சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.