மேலும்

Tag Archives: கட்டார்

கட்டாருக்கான சிறிலங்கா தூதுவர் பதவி விலகல்

கட்டார் நாட்டுக்கான சிறிலங்காவின் தூதுவர் ஏ.எஸ்.பி.லியனகே பதவியில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார். முன்னதாக அவரை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடு திரும்புமாறு உத்தரவிட்டார் என செய்திகள் வெளியாகியிருந்தன.

மகிந்தவின் புதல்வர்களின் பயணப் பொதியைக் காவிய சிறிலங்கா தூதுவரை திருப்பி அழைக்க அழுத்தம்

மகிந்த ராஜபக்சவின் இரண்டு புதல்வர்களையும், கட்டார் விமான நிலையத்தில் வரவேற்று அவர்களின், பயணப் பொதிகளைக் காவிச் சென்ற, கட்டார் நாட்டுக்கான சிறிலங்கா தூதுவர் ஏஎஸ்பி லியனகேயை திருப்பி அழைக்குமாறு சிறிலங்கா அதிபருக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சிறிலங்காவுக்கு உதவ கட்டார் இணக்கம் – 7 உடன்பாடுகள் கைச்சாத்து

சக்தி, துறைமுகங்கள், உட்கட்டமைப்பு துறைகளில் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு சிறிலங்காவுக்கு உதவ கட்டார் இணக்கம் தெரிவித்துள்ளது. கட்டாருக்கான இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாட் அல்  தானி இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்.

கட்டார் செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை கட்டாருக்கு இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின் போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் பல்வேறு உடன்பாடுகள் கையெழுத்திடப்படவுள்ளன.

கட்டாரில் விமான நிலையம், வணிக நிறுவனங்களில் முண்டியடிக்கும் கூட்டம் – இலங்கையர்கள் அச்சம்

கட்டாருடனான அனைத்துத் தொடர்புகளையும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாஹ்ரெய்ன், எகிப்து, யேமன் ஆகிய நாடுகள் துண்டித்துள்ளதால், கட்டாரில் உள்ள இலங்கையர்கள் மீது எந்த உடனடிப் பாதிப்பும் ஏற்படாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மகிந்தவை விடவும் சீனாவுக்கு வேண்டியவராகிவிட்ட மைத்திரி – உபுல் ஜோசப் பெர்னான்டோ

சீனா தற்போது மைத்திரிபால சிறிசேனவுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளது. சீனாவுக்கான அவரது பயணத்தைத் தொடர்ந்து, மகிந்த ராஜபக்சவைவை விட மைத்திரிபால சிறிசேன தனக்கு மிகவும் வேண்டியவர் என்பதை சீனா உணர்ந்துள்ளது.