மேலும்

Tag Archives: உக்ரேன்

சிறிலங்கா குறித்து ஜெனிவாவில் இரண்டு முக்கிய விவாதங்கள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 37 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 26ஆம் நாள் ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில், மார்ச் 16ஆம் நாளும், மார்ச் 21ஆம் நாளும் சிறிலங்கா தொடர்பான இரண்டு முக்கிய விவாதங்கள் இடம்பெறவுள்ளன.

18 விமானங்களை கொள்வனவு செய்கிறது சிறிலங்கா விமானப்படை

சிறிலங்கா விமானப்படை ஜெட் போர் விமானங்கள் உள்ளிட்ட 18 புதிய விமானங்களைக் கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளது.

ஆயுதங்களை வழங்காவிடினும் முக்கிய உதவியை வழங்கியது இந்தியா – கோத்தா

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பிரதானமாக சீனாவின் ஆயுதங்களே பயன்படுத்தப்பட்டாலும், சிறிலங்கா படையினருக்கான பயிற்சிகளை பெரும்பாலும் இந்தியாவே வழங்கியது என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜெனிவா கூட்டத்தொடரில் சிறிலங்கா தொடர்பாக மீளாய்வு

பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐ.நா குழுவின் கூட்டத்தொடரில், சிறிலங்காவின் பெண்களின் உரிமைகள் தொடர்பாக மீளாய்வு செய்யப்படவுள்ளது.

ஜெனிவா கூட்டத்தொடர் ஆர்வம்மிக்க அமர்வாக இருக்கும் – ஐ.நா மனித உரிமை பேரவைத் தலைவர்

ஜெனிவாவில் நாளை ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர், ஆர்வம்மிக்கதொன்றாக அமையும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ஜோகிம் ரூக்கர் தெரிவித்துள்ளார்.

உக்ரேன் செல்கிறது சிறிலங்காவின் உயர்மட்ட விசாரணைக்குழு

ரஸ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவரும், மகிந்த ராஜபக்சவின் பெறாமகனுமான, உதயங்க வீரதுங்க தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக, அரசாங்க மற்றும் காவல்துறை அதிகாரிகளை உள்ளடக்கிய உயர்மட்டக் குழுவொன்று உக்ரேனுக்குச் செல்லவுள்ளது.

உக்ரேன் ஆயுத விற்பனை விசாரணையில் மகிந்தவும் சிக்கலாம்

உக்ரேன் பிரிவினைவாதப் போராளிகளுக்கு, ஆயுதங்களை விற்பனை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள விவகாரத்தில், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவும் விசாரணைகளில் சிக்கக் கூடும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மகிந்தவின் மருமகனுக்கு எதிராக அனைத்துலக விசாரணை

உக்ரேனில் உள்ள பிரிவினைவாதப் போராளிகளுக்கு, ஆயுதங்களை விற்பனை செய்தார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள, ரஸ்யாவுக்கான சிறிலங்காவின்  முன்னாள் தூதுவர், உதயங்க வீரதுங்கவுக்கு எதிராக அனைத்துலக விசாரணை நடத்தப்படவுள்ளது.

உக்ரேன் பிரிவினைப் போராளிகளுக்கு ஆயுதங்களை விற்றதாக சிறிலங்கா தூதுவர் மீது குற்றச்சாட்டு

மகிந்த ராஜபக்சவின் உறவினரும், ரஸ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க, உக்ரேனிய பிரிவினைவாத போராளிகளுக்கு ஆயுதங்களை விற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.