அதிகாரப்பகிர்வு – ஒரே நாளில் குத்துக்கரணம் அடித்தது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
ஆட்சியமைத்து ஆறு மாதங்களுக்குள்- 13வது திருத்தச்சட்டத்தின் கீழ் மாகாணங்களுக்கு அதிகாரங்களை அளித்து, தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக வாக்குறுதி அளித்திருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஒரே நாளில் அந்த நிலைப்பாட்டில் இருந்து குத்துக்கரணம் அடித்துள்ளது.