சென்னையில் காவல்துறையின் தடையை மீறி ஈழத்தமிழர் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு
சென்னை மெரினா கடற்கரையில், காவல்துறையினரின் தடையை மீறி நேற்றுமாலை ஈழத்தமிழர் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
சென்னை மெரினா கடற்கரையில், காவல்துறையினரின் தடையை மீறி நேற்றுமாலை ஈழத்தமிழர் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் நேற்று முதல் தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை மையப்படுத்திய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் உணர்வெழுச்சியுடன் தொடங்கியது.
வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்தும், வடக்கு மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டால், தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டதாக, உலகம் தீவிரமாக கருத்தில் எடுத்துக் கொள்ளாது என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.
சிறிலங்காவில் இடம்பெற்றது இனப்படுகொலையா என்பது, நாம் பரிந்துரைத்துள்ள கலப்பு நீதிமன்றத்தை உள்ளடக்கிய குற்றவியல் விசாரணைகளின் பின்னரே கண்டறியப்பட வேண்டும் என்று, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணயகத்தின் பேச்சாளர் ரவினா சம்தாசனி தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் இனப்படுகொலைகள் இடம்பெற்றதாக இப்போது தாம் கருதவில்லை என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
இனப்படுகொலை விவகாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்காமல் அடக்கி வாசிக்குமாறு, அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தமக்கு அழுத்தம் கொடுத்ததாக வெளியான செய்தியை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார்.
அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் ‘தமிழ் இனத்தை நிர்மூலமாக்குவதற்கான’ திட்டமிட்ட மூலோபாயம் அரங்கேற்றப்பட்டது. தமிழ் மக்கள் சிறிலங்காவில் எஞ்சியிருக்கக் கூடாது என்பதற்காக இவ்வாறானதொரு இனப்படுகொலை முயற்சி மிக இரகசியமாக மேற்கொள்ளப்பட்டது.
பிரான்சின் லியோன் நகரில் இன்று ஆரம்பமாகும், இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான ஐந்து நாள் அனைத்துலக பயிலரங்கில் சிறிலங்காவும் பங்கேற்கவுள்ளது.