மேலும்

Tag Archives: இந்தியா

தேஜஸ் போர் விமானத்தை ஆய்வு செய்தார் சிறிலங்கா விமானப்படைத் தளபதி

அண்மையில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கபில ஜெயம்பதி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகு தாக்குதல் உலங்குவானுர்தியைச் செலுத்திப் பார்த்துள்ளார் என்றும், தேஜஸ் போர் விமானத்தின் கட்டுப்பாட்டு முறையை ஆய்வு செய்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பாந்தோட்டை உடன்பாடு – முழு விபரங்களையும் அம்பலப்படுத்தக் கோருகிறது ஹெல உறுமய

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சீனாவின் மேர்ச்சன்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் சிறிலங்கா அரசாங்கம் செய்துள்ள புரிந்துணர்வு உடன்பாடு பற்றிய முழுமையாக தகவல்களும் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய கோரியுள்ளது.

இந்திய மாக்கடலில் இந்தியா – சீனா இடையே தீவிரமடையும் இழுபறிப் போர்

இந்தியா தனது கொல்லைப் புறமாகக் கருதும் இந்திய மாக்கடலின் கிழக்கு கடற்பரப்பில் சீனக் கடற்படையின் செயற்பாடு அதிகரித்து வரும் நிலையில் இப்பிராந்தியம் மீதான தனது நலன்களைப் பாதுகாப்பதற்கான தீவிர முயற்சிகளை இந்தியா முன்னெடுத்து வருகிறது.

எந்த விலையைக் கொடுக்கவும் தயாராக உள்ள சீனா

‘பசுபிக் பிராந்தியத்தை அமெரிக்கா மீள்சமப்படுத்தும். இந்திய-ஆசிய-பசுபிக் பிராந்தியத்திலுள்ள எமது நண்பர்கள் மற்றும் கூட்டணி நாடுகளுடன் எமது கூட்டுப் படையானது மிக நெருக்கமாகப் பணியாற்றும். கோரிக்கை விடுக்கப்பட்டால் பரந்த இந்திய-ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்க நலன்களைப் பாதுகாப்பதற்காகப் போரிடுவோம்.

சீனாவுக்கு விற்கப்படும் அம்பாந்தோட்டை துறைமுகம் – இந்தியா கவலை

அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு விற்கப்படுவது, இந்தியாவுக்கு கவலையளிக்கும் விடயம் என்று இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரிகளில் ஒருவரான யோகேந்திர குமார் தெரிவித்துள்ளார்.

பண நெருக்கடி – விதிமுறையை தளர்த்துமாறு இந்திய அரசிடம் வெளிநாட்டு தூதரகங்கள் கோரிக்கை

வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் பணத்தைப் பெறுவதற்கு இருக்கும் கட்டுப்பாடுகளைத் தளர்த்துமாறு இந்திய அரசாங்கத்திடம் சிறிலங்கா உள்ளிட்ட பல வெளிநாட்டுத் தூதரகங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

கச்சதீவு புதிய தேவாலயத் திறப்புவிழாவில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை

புதிதாக அமைக்கப்பட்டுள்ள கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் திறப்பு விழாவில் பொதுமக்கள் எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று, மீனவர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருப்பதாக, இந்திய புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிடம் 700 கோடி ரூபாவுக்கு தொடருந்துகளை வாங்குகிறது சிறிலங்கா

இந்தியாவிடம் இருந்து 10 தொடருந்து இயந்திரங்களையும், 6 டீசல் தொடருந்து தொகுதிகளையும், 700 கோடி இந்திய ரூபா செலவில் சிறிலங்கா கொள்வனவு செய்யவுள்ளது.

சிறிலங்காவுடன் சுதந்திர வர்த்தக உடன்பாட்டை விரிவுபடுத்த இந்தியா முயற்சி

சிறிலங்காவுடனான சுதந்திர வர்த்தக உடன்பாட்டை மேலும் விரிவுபடுத்துவது குறித்துப் பேச்சு நடத்துவதற்கு, இந்திய உயர் அதிகாரிகள் குழுவொன்று கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

சீனாவினதும், இந்தியாவினதும் உதவி தேவை – சிறிலங்கா

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு சீனாவினதும், இந்தியாவினதும் உதவி தேவைப்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.