இரண்டு நிமிடங்களில் கலைந்த அரசியலமைப்பு பேரவை
புதிய அரசியலமைப்பு தொடர்பாக வழிநடத்தல் குழு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கை குறித்த அரசியலமைப்பு பேரவையின் இறுதி நாள் விவாதம், உரையாற்றுவதற்கு உறுப்பினர்கள் இல்லாததால் இரண்டு நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
புதிய அரசியலமைப்பு தொடர்பாக வழிநடத்தல் குழு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கை குறித்த அரசியலமைப்பு பேரவையின் இறுதி நாள் விவாதம், உரையாற்றுவதற்கு உறுப்பினர்கள் இல்லாததால் இரண்டு நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தம் 46 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் போட்டியில் குதித்துள்ளன. இன்று நண்பகலுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்ததையடுத்து, மட்டக்களப்பு மாவட்டத் தெரிவத்தாட்சி அதிகாரி பி.எஸ்.எம். சாள்ஸ் இதனைத் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரசை சேர்ந்த அமீர் அலி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் விலகியதை அடுத்து. சிறிலங்கா நாடாளுமன்றத்தில், மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்துள்ளது.
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அமீர் அலி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்கவுள்ளார்.
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அமீர் அலி, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்க மறுத்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.எச்.எம்.அஸ்வர், இன்று தனது பதவியை விட்டு விலகியுள்ளார்.இவர் தனது பதவிவிலகல் கடிதத்தை, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க திசநாயக்கவிடம் கையளித்துள்ளார்.