மலேசியப் போர்க்கப்பலில் இருந்து அதிகாரியை மீட்டு வந்த சிறிலங்கா கடற்படை
சிறிலங்காவுக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த மலேசிய போர்க்கப்பல் ஒன்றில், நோயுற்றிருந்த கடற்படை அதிகாரி ஒருவர் சிறிலங்கா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.
சிறிலங்காவுக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த மலேசிய போர்க்கப்பல் ஒன்றில், நோயுற்றிருந்த கடற்படை அதிகாரி ஒருவர் சிறிலங்கா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.
ஏனைய நாடுகளின் கடற்படைகள் பயன்படுத்திய கப்பல்களை நல்ல நிலையிலேயே சிறிலங்கா கடற்படை பெற்றுக் கொள்கிறது என்று சிறிலங்கா கடற்படையின் தலைமை அதிகாரி றியர் அட்மிரல் பியால் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்திய கடற்படையினருடன் இணைந்து பல்வேறு கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டு விட்டு சிறிலங்கா கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் கொழும்பு திரும்பியுள்ளன.
சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் அங்கரேஜ் தரையிறக்கப் போர்க்கப்பல், சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
சிறிலங்காவுக்கு மேலும் சில போர்க்கப்பல்களை சீனா வழங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று பீஜிங்கை தளமாக கொண்ட இராணுவ ஆய்வாளரான ஷோ சென்மிங் தெரிவித்துள்ளார்.
இந்தியக் கடற்படையின் ‘ஐஎன்எஸ் திரிகண்ட்’ என்ற போர்க்கப்பல், நல்லெண்ணப் பயணமாக, கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்தது. கடற்படை மரபுகளுக்கு அமைய, இந்திய போர்க்கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் வரவேற்பு அளித்தனர்.
நான்கு நாட்களாக கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நின்ற ஈரானிய கடற்படையின் நாசகாரிப் போர்க்கப்பல்கள் அணி நேற்று புறப்பட்டுச் சென்றது..
ஜப்பானியக் கடற்படையான கடல்சார் தற்காப்புப் படையின், போர்க்கப்பல் ஒன்று திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்துள்ளது.
பிரெஞ்சுக் கடற்படையில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட போர்க்கப்பலான FS Auvergne நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக நேற்று கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சீன கடற்படைக் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை விட்டுப் பறப்பட்டுச் சென்ற அதேவேளை அவுஸ்ரேலியக் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளது.