பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐ.நா விசாரணை அறிக்கை இன்று வெளியாகிறது
சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணைகளின் அறிக்கை இன்று பகிரங்கமாக வெளியிடப்படவுள்ளது.
சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணைகளின் அறிக்கை இன்று பகிரங்கமாக வெளியிடப்படவுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம், ஒற்றையாட்சிக்குள் தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது குறித்து தமது அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிடம் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் பொறுப்புக் கூறல் குறித்த செயல்முறைகள் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து, அதன் இணக்கப்பாட்டுடனும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆதரவுடனும் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரும் பணியில் ஈடுபடவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
சிறிலங்கா அரசாங்கம் உண்மை ஆணைக்குழு ஒன்றை அமைக்கவுள்ளதாகவும், காணாமற்போனோர் குறித்த பணியகம் ஒன்றை திறக்கவுள்ளதாகவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வாக்குறுதி அளித்துள்ளது.
சிறிலங்கா தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கையை நாளை மறுநாள் வெளியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், இந்த அறிக்கையின் கண்டறிவுகள் மிகத் தீவிரத் தன்மை கொண்டவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா விசாரணை அறிக்கையின் உள்ளடக்கம் எக்காரணம் கொண்டும் வெளியே கசியவிடப்படக் கூடாது என்ற கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையிலேயே, சிறிலங்கா அரசாங்கத்துக்கு அறிக்கையின் முற்பிரதியை ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு கையளித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது அமர்வு, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினர் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.
ஜெனிவாவில் நாளை ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர், ஆர்வம்மிக்கதொன்றாக அமையும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ஜோகிம் ரூக்கர் தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான உள்நாட்டு விசாரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணங்க வைப்பதற்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆதரவு கோரவுள்ளார்.