மேலும்

தென்சீனக்கடல் விவகாரத்துக்கு பேச்சுக்களின் மூலமே தீர்வு காண முடியும் – சிறிலங்கா

தென்சீனக் கடல் விவகாரம்,  அமைதியான முறையில், ஆக்கபூர்வமான, அர்த்தமுள்ள பேச்சுக்களின் மூலம் தீர்க்கப்படுவதே ஒரு வழிமுறை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சட்டரீதியான கருத்தையே வெளியிட்டேன் – என்கிறார் மக்ஸ்வெல் பரணகம

கொத்தணிக் குண்டுகள் தொடர்பான குற்றச்சாட்டுத் தொடர்பாக தாம் வெளியிட்ட கருத்து, சட்டரீதியான நிலைப்பாடே என்று காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

இராணுவமய சூழலில் இருந்து 2018இல் சிறிலங்கா முற்றாக விடுபடும் – மங்கள சமரவீர

2018ஆம் ஆண்டுக்குள், இராணுவமய சூழலில் இருந்து சிறிலங்கா முற்றாக விடுபட்டு விடும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வடக்கில் சிங்களவர், முஸ்லிம்களை குடியேற்றுவதற்கு செயலணி – சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல்

வடக்கில் போரினால் இடம்பெயர்ந்த சிங்கள, மற்றும் முஸ்லிம்களை மீளக் குடியமர்த்துவதற்கான செயலணி ஒன்றை உருவாக்க சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கொத்தணிக் குண்டுகள் குறித்த பரணகமவின் கருத்துக்கு மங்கள சமரவீர கண்டனம்

இறுதிக்கட்டப் போரில் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிராகரித்து அறிக்கை வெளியிட்டதன் மூலம், காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம, தனது அதிமேதாவித்தனத்தை வெளிப்படுத்த முயற்சித்திருப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குற்றம்சாட்டியுள்ளார்.

வெளிநாட்டு நீதிபதிகள் குறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை – சிறிலங்கா அரசு

உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில், வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்து அவரது தனிப்பட்ட கருத்தே என்றும், அது சிறிலங்கா அரசாங்கத்தின் இறுதியான நிலைப்பாடு அல்ல என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.

போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் – மங்கள சமரவீர

போரின் இறுதிக்கட்டத்தி்ல் சிறிலங்கா இராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் என்று கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, உண்மை கண்டறியும் ஆணைக்குழு விசாரணைகளை நடத்தும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வெளிவிவகாரச் செயலராகிறார் எசல வீரக்கோன் – இந்தியாவுக்கான தூதுவராக சித்ராங்கனி

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலராக எசல வீரக்கோன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் நாள் இந்தப் புதிய பதவியை ஏற்றுக் கொள்வார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.

திருகோணமலை – மதவாச்சி இடையே புதிய தொடருந்து வழித்தடம் – இந்தியா ஆர்வம்

திருகோணமலையில் இருந்து மதவாச்சிக்கு புதிய தொடருந்து வழித்தடம் ஒன்றை உருவாக்குவதில், இந்தியா ஆர்வம் கொண்டிருப்பதாக, பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

பசில் ராஜபக்சவின் குளிரூட்டப்பட்ட நாய்க்கூண்டு – பராமரிப்பில் ஈடுபடுத்தப்பட்ட கடற்படையினர்

சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பசில் ராஜபக்ச இருந்த போது, அவர் வளர்த்த உயர்வகை நாய்களைப் பராமரிக்க ஐந்து சிறிலங்கா கடற்படையினருக்கு முழுநேரப் பணி வழங்கப்பட்டிருந்ததாக பாரிய மோசடிகள், ஊழல்கள், அதிகார முறைகேடுகள் குறித்து விசாரிக்கும், அதிபர் ஆணைக்குழுவின் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.