மேலும்

அமெரிக்க உதவிச் செயலர்கள் சிறிலங்கா பிரதமர், பாதுகாப்புத் தரப்புடன் பேசவுள்ளனர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலர்களான நிஷா பிஸ்வால் மற்றும் ரொம் மாலினோவ்ஸ்கி ஆகியோர் இன்று சி்றிலங்கா பிரதமரையும், பாதுகாப்புத் தரப்பினரையும் சந்தித்துப் பேசவுள்ளனர்.

சிறிலங்காவில் நடப்பதை உலகம் கவனிக்கிறது – ரொம் மாலினோவ்ஸ்கி

சிறிலங்காவில் என்ன நடக்கிறது என்பது உலகம் முழுழுவதிலும் உள்ள மக்களுக்கு முக்கியமான விடயமாக இருக்கிறது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர், ரொம் மாலினோவ்ஸ்கி தெரிவித்தார்.

நல்லிணக்கச் செயல்முறைகளில் சிறிலங்காவின் பங்காளராக இணைந்திருப்போம் – நிஷா பிஸ்வால்

போருக்குப் பிந்திய நல்லிணக்க செயல்முறைகளை சிறிலங்கா முன்நோக்கி நகர்த்துவதற்கு, அதன் பங்காளராக இணைந்திருப்பதில் அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால் தெரிவித்தார்.

இன்று காலை கூட்டமைப்பை சந்திக்கின்றனர் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர்கள்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலர்கள் நிஷா பிஸ்வால் மற்றும் ரொம் மாலினோவ்ஸ்கி ஆகியோர் இன்று காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர்.

மங்கள சமரவீரவுடன் நிஷா பிஸ்வால், ரொம் மாலினோவ்ஸ்கி சந்தித்துப் பேச்சு

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வாலும்  அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள், மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கியும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

சாம்பல்தீவில் மீண்டும் குடியேறினார் புத்தர் – படங்கள்

திருகோணமலை- சாம்பல்தீவு சந்தியில், சிறிலங்கா படையினரால் கைவிடப்பட்ட இராணுவ முகாம் பகுதியில் நேற்று மீண்டும் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசுக்கு எதிரான பாதயாத்திரை – கண்டியில் பசில் இரகசியக் கூட்டம்

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் எதிர்வரும் 28ஆம் நாள் கண்டியில் ஆரம்பிக்கப்படவுள்ள பாதயாத்திரை தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நேற்று இரகசியக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.

சிறிலங்காவில் பாரிய எரிவாயு முனையத்தை அமைக்கும் முயற்சியில் இந்திய நிறுவனம்

சிறிலங்காவில் திரவ இயற்கை எரிவாயு முனையம் ஒன்றை நிறுவும் முயற்சிகளில் இந்தியாவின் பெட்ரோநெட் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக, அந்த நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பிரபாத் சிங் தெரிவித்துள்ளார்.

நாமலுக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகமாட்டேன் – மகிந்த கைவிரிப்பு

தனது மகன் நாமல் ராஜபக்சவுக்காக நீதிமன்றத்திலோ, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிலோ முன்னிலையாக மாட்டேன் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சாம்பல்தீவுச் சந்தியில் புதிதாக முளைக்கும் புத்தர் சிலையால் தமிழ் மக்கள் மத்தியில் பதற்றம்

திருகோணமலை சாம்பல்தீவுச் சந்தியில் மீண்டும் புத்தர் சிலையை நிறுவும் முயற்சிகள், பௌத்த பிக்குகள், மற்றும் சிங்களவர்களால் நேற்று முன்னெடுக்கப்பட்டதையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.