மேலும்

வேலூர் சிறையில் பேரறிவாளன் மீது கொலைவெறித் தாக்குதல் – படுகாயங்களுடன் தப்பினார்

ராஜிவ் காந்தி  கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், வேலூர் மத்திய சிறைச்சாலையில், வடமாநில ஆயுள் தண்டனை கைதி ஒருவர் இரும்புக்கம்பியால் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்தார்.

சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்க கடற்படை அளித்த பயிற்சிகள் நிறைவு

திருகோணமலையில் சிறிலங்கா கடற்படையினருக்கு அமெரிக்க கடற்படையின், வெடிபொருட்களைச் செயலிழக்கச் செய்யும் 5ஆவது நடமாடும் பிரிவு அளித்து வந்த பயிற்சி கடந்த வாரம் முடிவுக்கு வந்துள்ளது.

சிறிலங்காவில் காணாமற்போனோர் விவகாரம் நாளை மறுநாள் ஜெனிவாவில் ஆராய்வு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவில் காணாமற்போகச் செய்யப்பட்டோர் விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் ஆராயப்படவுள்ளது.

மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதற்கு சிறிலங்கா படைகளை அனுப்ப முடிவு

ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்கா படையினரின் பங்களிப்பு அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார்.

இந்திய வர்த்தக அமைச்சர் சிறிலங்கா வருகிறார்

இந்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று, சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷா டி சில்வா தெரிவித்துள்ளார்.

எமது புதைகுழிகளை நாமே தோண்டினோம் – மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன

பொது எதிரியான இந்திய அமைதிப்படைக்கு எதிராகப் போரிடுவதற்கு, 1980களின் இறுதியில் பிரேமதாச அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு இரகசியமாக ஆயுதங்களை வழங்கியதானது, சிறிலங்காவின் எந்தவெலாரு அரசாங்கமும் எடுத்திராத மிகவும் விரும்பப்படாத- ஆபத்தான நடவடிக்கை என்று மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா விமானப்படைத் தளபதியாக எயர் மார்ஷல் கபில ஜெயம்பதி நியமனம்

சிறிலங்கா விமானப்படையின் புதிய தளபதியாக, எயர் வைஸ் மார்ஷல் கபில ஜெயம்பதி நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

4419 ஏக்கரில் ஒரு அங்குல நிலமும் விடுவிக்கப்படாது – யாழ். படைகளின் தளபதி

யாழ்ப்பாணத்திலும் பலாலி இராணுவ கன்டோன்மென்ட் பிரதேசத்திலும், இராணுவத்தினரிடம் உள்ள 4419 ஏக்கர் காணிகளில் ஒரு அங்குலமேனும் திருப்பிக் கொடுக்கப்படமாட்டாது என்று யாழ். படைகளின் கட்டளைத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

அணிசேரா நாடுகளின் மாநாட்டில் மைத்திரியின் பிரதிநிதியாக மகிந்த

அணிசேரா நாடுகளின் அமைப்பின் 17ஆவது உச்சி மாநாட்டில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பிரதிநிதியாக, சிறிலங்கா குழுவுக்கு அமைச்சர் மகிந்த சமரசிங்கவே தலைமை தாங்கவுள்ளார்.

மேஜர் ஜெனரல் சுமேத பெரேராவுக்கு அமெரிக்காவில் நியமனம்

நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் பணியகத்துக்கான புதிய இராணுவ இணைப்பதிகாரியாக மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.