மேலும்

மாறி வரும் இலங்கைத் தீவின் வரைபடம்

இலங்கைத் தீவின் வரைபடம் மாற்றமடைந்து வருகிறது கொழும்பு துறைமுக நகரம் அல்லது நிதி நகரத்தை அமைக்கும் பணிகளால் இலங்கைத் தீவின் உருவ வரைபடத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

ஐதேகவில் ரணிலுக்கு இணையாக சரத் பொன்சேகாவுக்கு முக்கியத்துவம்

கிரிபத்கொடவில் நேற்று நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணியில் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இணையாக, அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.

ஓய்வுபெற்ற பின்னர் பேருந்தில் வீட்டுக்குச் சென்ற மாத்தளை மாவட்டச் செயலர்

மாத்தளை மாவட்டச் செயலர் குமாரசிறி பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், தனது அதிகாரபூர்வ வாகனத்தை அதிகாரிகளிடம் கையளித்து விட்டு, பேருந்தில் ஏறி வீட்டுக்குச் சென்ற சம்பவம் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கேசன்துறையில் தொடங்கிய சிறிலங்கா இராணுவத்தின் பாரிய களப்பயிற்சி சூரியவெவவில் நிறைவு

மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதற்காகச் செல்லவுள்ள சிறிலங்கா இராணுவத்தினர் காங்கேசன்துறையில் ஆரம்பித்த பாரிய களப் பயிற்சி ஒத்திகை சூரியவெவவில் நேற்று முடிவுக்கு வந்தது.

முள்ளிக்குளத்தில் போராட்டம் நடத்தும் மக்களுடன் அனைத்துலக மன்னிப்பு சபை செயலர் சந்திப்பு

முள்ளிக்குளத்தில் சிறிலங்கா கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள, தாம் பூர்வீகமாக வாழ்ந்து வந்த நிலங்களை விடுவிக்கக் கோரி போராட்டம் நடத்தி வரும் அப்பகுதி மக்களை அனைத்துலக மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம், சலில் ஷெட்டி நேற்று சந்தித்துப் பேசினார்.

போர்க்குற்றங்கள் நடக்கவேயில்லை, போர்க்குற்ற விசாரணை எதற்கு? – ராஜித சேனாரத்ன கேள்வி

இறுதிக்கட்டப் போரின் போது போர்க்குற்றங்கள் எவையும் இடம்பெறவுமில்லை, அவ்வாறு இடம்பெற்றதாக அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவுமில்லை. இந்தநிலையில், போர்க்குற்ற விசாரணைகள் தேவையற்றது என்று சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன  தெரிவித்தார்.

அவுஸ்ரேலியாவின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் நாளை கொழும்பு வருகிறார்

அவுஸ்ரேலியாவின் அனைத்துலக அபிவிருத்தி மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சர் கொன்சீற்றா பியராவன்ரி வெல்ஸ் சிறிலங்காவுக்கு நாளை பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

வடக்கு மாகாணசபையுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி பேச்சு

ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறிலங்காவுக்கான பணியகத்தின் அரசியல், வர்த்தக மற்றும் தொடர்பாடல் பிரிவின் தலைவர் போல் கொட்பிரே, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

நல்லிணக்கச் செயற்திட்டங்களுக்கு வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு தடை

ஐ.நாவுடன் தொடர்புடைய அமைப்புகளின் உதவியுடன் சந்திரிகா குமாரதுங்க மற்றும் மனோ கணேசன் உள்ளிட்டோரால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க விழிப்புணர்வுத் திட்டங்களைக் குழப்பும் உத்தரவு ஒன்று சிறிலங்கா பிரதமரால் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கிய ஜே.ஆரின் மகன் ரவி ஜெயவர்த்தன காலமானார்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் மகனும், சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கியவருமான ரவி ஜெயவர்த்தன இன்று பிற்பகல் கொழும்பில் காலமானார்.