மேலும்

வடக்கு முதல்வருடன் அமெரிக்க துணைத் தூதுவர் சந்திப்பு – மயிலிட்டியையும் பார்வையிட்டார்

சிறிலங்காவுக்கான அமெரிக்க துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் நேற்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

வடக்கில் பாதுகாப்பை பலப்படுத்த முப்படைகளின் உதவியையும் கோருவோம்- காவல்துறை மா அதிபர்

யாழ்ப்பாணத்துக்கு நேற்று திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்ட சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, வடக்கின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.

எனது ஆசி இல்லாமல் எவராலும் புதிய அரசாங்கத்தை அமைக்க முடியாது- சிறிலங்கா அதிபர் எச்சரிக்கை

எனது ஆசி இல்லாமல் எவராலும் புதிய அரசாங்கத்தை அமைத்து விட முடியாது என்பதை எல்லோரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரை அடுத்தடுத்து சந்தித்த ரஷ்ய, அமெரிக்க தூதுவர்கள்

அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் சிறிலங்கா தூதுவர்கள் நேற்று ஒரே நாளில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை திடீரெனச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

வட மாகாணசபை உறுப்பினர்கள் மூவரிடம் விசாரணை

வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மூவரிடம் சிறிலங்கா காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று விசாரணைகளை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

கண்டி நகரிலுள்ள சிறிலங்கா இராணுவ முகாமை அகற்றுவதற்கு அஸ்கிரிய பீடம் எதிர்ப்பு

கண்டி நகரத்தில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட்டின் முகாமை அகற்றுவதற்கு அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கரும், பௌத்த பிக்குகளும் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

யாழ். படைகளின் தலைமையகத்துக்கு சிறிலங்கா இராணுவத் தளபதி இறுக்கமான உத்தரவு

யாழ்ப்பாணக் குடாநாட்டின் பாதுகாப்பு நிலவரங்களை ஆராய்ந்த சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, எந்தவொரு சூழ்நிலையிலும் இராணுவத் தலைமையகத்தின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளாமல், சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் தலையீடு செய்யக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

சீன – சிறிலங்கா உறவுகளால் இந்திய நிபுணர்கள் அச்சம் – இந்திய ஊடகம்

வளர்ந்து வரும் சிறிலங்கா- சீன உறவுகள் குறித்து இந்திய நிபுணர்கள் அச்சம் கொண்டுள்ளனர் என்று இந்திய ஊடகம் ஒன்றில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குள் சீனாவின் கணினிகள் – உறுப்பினர்கள் பயன்படுத்த வசதி

சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும், நாடாளுமன்றத்துக்குள் பயன்படுத்துவதற்காக இணைய வசதிகளுடன் கூடிய மடிக்கணினிகள் பொருத்தப்படவுள்ளன.

இந்தியாவிடம் வாங்கப்பட்ட போர்க்கப்பலை இந்திய எல்லையிலேயே நிறுத்துகிறது சிறிலங்கா

இந்தியாவிடம் இருந்து அண்மையில் கொள்வனவு செய்யப்பட்ட புத்தம் புதிய போர்க்கப்பல், வெளிநாட்டவர்களின் ஊடுருவல் மற்றும் கடத்தல்களை முறியடிக்க  பாக்கு நீரிணையில் நிறுத்தப்படும் என்று சிறிலங்கா கடற்படை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.