மேலும்

பெற்றோல் தட்டுப்பாட்டுக்கு இந்திய நிறுவனம் காரணமல்ல – சிறிலங்கா பிரதமர்

சிறிலங்காவில் பெற்றோலுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டுக்கு லங்கா ஐஓசி எனப்படும் இந்திய நிறுவனமே காரணம் என்று சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது என்றும்,  இந்த நெருக்கடிக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

15 ஆயிரம் தொன் பெற்றோலை இந்தியாவில் இருந்து விநியோகிக்க லங்கா ஐஓசி அவசர நடவடிக்கை

லங்கா ஐஓசி நிறுவனம், அவசரமாக 15 ஆயிரம் தொன் பெற்றோலை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

சிறிலங்காவின் கடப்பாடுகளை நிறைவேற்ற அமெரிக்கா உதவும் – கூட்டறிக்கையில் தெரிவிப்பு

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் உள்ளிட்ட கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு சிறிலங்காவுக்கு ஆதரவளிப்பதாக அமெரிக்கா, தெரிவித்துள்ளது.

சிறிலங்கா கடற்படைக்கு போர்க்கப்பலை வழங்குகிறது அமெரிக்கா

அமெரிக்க கடலோரக்காவல் படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட போர்க்கப்பல் ஒன்றை சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்கா வழங்கவுள்ளது.

தரம்குறைந்த எரிபொருளை கப்பலில் இருந்து இறக்குமாறு அழுத்தம் – சிறிலங்கா அமைச்சர் குற்றச்சாட்டு

சிறிலங்காவில் எரிபொருள் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ள நிலையில், தரம்குறைந்த எரிபொருளை கப்பலில் இருந்து இறக்குமாறு தனக்கு அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக, சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற சமநிலையை மாற்றியமைக்குமா உச்சநீதிமன்ற தீர்ப்பு?

2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு கீதா குமாரசிங்க தகுதியற்றவராக இருந்தார் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து, ஏனைய குறைந்தது ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மோசமான விளைவுகள் ஏற்படக் கூடும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ரணில், மாரப்பனவுடன் அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் பேச்சு

சிறிலங்காவுக்கு இரண்டு நாட்கள் பயணமாக வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் தோமஸ் சானொன் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

கூட்டமைப்பில் இருந்து விலகி சுதந்திரமாகச் செயற்படவுள்ளார் சிவசக்தி ஆனந்தன்?

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி, சுதந்திரமான உறுப்பினராகச் செயற்படவுள்ளார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வெள்ளியன்று கொழும்பு வரும் சீனப் போர்க்கப்பல் – அம்பாந்தோட்டைக்கும் செல்கிறது?

இந்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள, சீனப் போர்க்கப்பல் அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கும் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2018இல் வணிகம் செய்ய சிறந்த நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவுக்கு 111 ஆவது இடம்

2018ஆம் ஆண்டில், உலகில் வணிகம் செய்வதற்கு சிறந்த நாடுகளின் பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. 190 நாடுகளின் இந்தப் பட்டியலில் சிறிலங்கா 111 ஆவது இடத்தில் உள்ளது.