மேலும்

குறுகிய ஒற்றையாட்சி மனோநிலை அழிவுகளுக்கே வழிவகுக்கும்

சந்திரசோமா எதிர் சேனாதிராஜா வழக்கு (SC Spl 03/2014 -Decided on 04/08/2017)  தொடர்பாக இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் சிறிலங்கா  உச்சநீதிமன்றம் அளித்த  தீர்ப்பானது மக்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்படவில்லை. தற்போது இடம்பெறும் புதிய அரசியலமைப்பு மீதான விவாதமானது, அரசியலமைப்பு எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை போல் தெரிகிறது.

மார்ச் மாதம் இந்திய நிறுவனத்தின் வசமாகிறது மத்தல விமான நிலையம்

மத்தல மகிந்த ராஜபக்ச விமான நிலையம், எதிர்வரும் மார்ச் மாதம் தொடக்கம் இந்திய நிறுவனத்துடன் இணைந்து இயக்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முக்கிய விவகாரங்கள் குறித்து முஸ்லிம் காங்கிரசுடன் பேசவுள்ளது கூட்டமைப்பு

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் அடுத்த வாரமளவில், முக்கிய பேச்சுக்கள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாமரை மொட்டுக்குத் தலைமையேற்கிறார் மகிந்த – அனுராதபுரவில் முதல் பரப்புரைக் கூட்டம்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் தலைமையில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகள் ஆரம்பமாகவுள்ளன.

பலாலி படைத்தள நுழைவாயிலுக்கு முன்பாக பெருமளவு மக்கள் போராட்டம்

பலாலி படைத்தளக் குடியிருப்பு வளாக (cantonment) நுழைவாயிலுக்கு முன்பாக, வலி.வடக்குப் பகுதி மக்கள் நேற்று பெரியளவிலான போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

அம்பாந்தோட்டை துறைமுகம் டிசெம்பர் 8இல் சீன நிறுவனத்திடம் கையளிப்பு

சீனாவின் மேர்ச்சன்ட்ஸ் ஹோல்டிங் நிறுவனமும், சிறிலங்கா துறைமுக அதிகார சபையும் இணைந்து, எதிர்வரும், டிசெம்பர் 8ஆம் நாள் தொடக்கம், அம்பாந்தோட்டை துறைமுகத்தை, கூட்டு முயற்சியாக இயக்கவுள்ளன.

சிறிலங்காவில் தூதரகம் அமைக்க இடம்தேடுகிறது நியூசிலாந்து

சிறிலங்காவில் தூதரகத்தை அமைப்பதற்குப் பொருத்தமான இடத்தை, நியூசிலாந்து அரசாங்கம் தேடி வருவதாக இந்தியாவுக்கான நியூசிலாந்து தூதுவர் ஜொவன்னா கெம்கேர்ஸ் தெரிவித்துள்ளார்.

இடைக்கால அறிக்கை குறித்து இணையவழி கருத்துக்கணிப்பு நடத்த முடிவு

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நாடாளுமன்ற வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக, பொதுமக்களின் கருத்துக்களை இணைய வழியில் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

கொழும்பு வந்தது பாகிஸ்தான் போர்க்கப்பல்

பாகிஸ்தான் கடற்படையின், பிஎன்எஸ் சைய்ப் என்ற போர்க்கப்பல் நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

மகிந்தவுக்கு முந்திரி கொடுத்த மலிக் சமரவிக்கிரம

அரசியலமைப்பு மாற்றம், உள்ளூராட்சித் தேர்தல் ஏற்பாடுகள் என்று சிறிலங்கா அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியலில் எதிர் எதிர் சக்திகளாக இயங்கும் இரண்டு கட்சிகளின் தலைவர்கள் நேற்று ஒன்றாக அமர்ந்து ரகர் போட்டியை கண்டு களித்தனர்.